டி மாத வளர்பிறை செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி செவ்வாயை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்திற்குப் பிறகு மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த சிறப்பு வழிபாட்டில் புகழூர், நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், புன்னம் சத்திரம் அருகே உள்ள பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட நொய்யல் சுற்றுவட்டார முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version