மேஷம்: சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.
ரிஷபம்: நீங்கள் பலவிதமான புதிர்களுக்கான பதிலைத் தேடுவீர்கள். மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம் மற்றும் வருத்தம் ஏற்படும். தன்னம்பிக்கை குறையும்.
மிதுனம்: நிதி நிலைமை அல்லது சொத்துக்கள் குறித்த கவலை இருக்கும். சிறிது பண நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சாதாரண பிரச்சினை கூட உங்கள் மனதைப் பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக சில முடிவுகளை எடுக்கக் கூடும்.
கடகம்: வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகளுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. அவர்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கைத் துணைக்கான எதிர்கால திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும்.
சிம்மம்: உங்கள் வர்த்தக பணிகளை நேரத்திற்கு முன்னதாக முடிப்பதில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் நீங்கள் களைப்பாக உணருவீர்கள்.
கன்னி: உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயலாற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
துலாம்: காதல் வயப்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு நீங்கள் சந்திக்கும் நபர் உங்களுக்கு பொருத்தமானவரா? எனப் பொறுமையாக சிந்தித்து முடிவு எடுங்கள். காதலுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
விருச்சிகம்: வர்த்தகத்திற்கான சிறந்த நாளாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களை ஒரு புதிய தயாரிப்பு அறிமுகத்தின் மூலம் அதிர்ச்சி அடையச் செய்யலாம். இருப்பினும், நட்சத்திரங்கள் சாதகமான நிலையில் இல்லாததால், சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
தனுசு: உங்களுக்குக் கோப உணர்வு அதிகம் இருக்கும். கோபம் உலகையே அழித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். இதனால் பாதிக்கப்படுவது நீங்கள் தான். அதனால் பொறுமையாக, அவசரப்படாமல் சிந்தித்து செயல்படவும்.
மகரம்: உங்கள் அறிவுத் திறமை உங்களுக்கு அற்புதமான வெற்றிகளை அளிக்கும். பல பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும் எளிதாக சமாளிப்பீர்கள். செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு திட்டம் வெற்றி பெற்று உங்களுக்கு புகழைச் சேர்க்கும்.
கும்பம்: எதிர்பாராத ஒரு நிகழ்வு இன்று ஏற்படலாம். வெற்றி, பணம் மற்றும் காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராத வகையில் உங்களுக்குக் கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடக்கூடும்.
மீனம்: அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டையும் நீங்கள் பொறுப்புடன் சிறப்பாக கையாளுவீர்கள். வீட்டை அலங்கரிக்கும் பணியில் முழு மனதுடன் ஈடுபடுவீர்கள். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். கடுமையான உங்களது முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.

