Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

3-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கு – உங்களுக்கு எப்படி?
ராசிபலன்

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கு – உங்களுக்கு எப்படி?

Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
raasii
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மேஷம்: எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து செயலாற்றுவது நன்மை தரும். திட்டங்களை தீட்டவும், கணக்கீடுகளை உருவாக்கவும் ஜோதிட கணிப்பை அறிவுறுத்தலாக எடுத்துக்கொண்டு பொது அறிவின் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்பது நல்லது.

ரிஷபம்: இன்றைய தினம் வாதங்களும் விவாதங்களும் நிறைந்திருக்கும். பிற்பகலில் நண்பர்களுடன் வணிக விவாதங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. மாலையில் மனதிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும்.

மிதுனம்: பிரச்சினைகளை தீர்ப்பது கடுமையாக இருந்தாலும், உங்களால் அதை செய்துமுடிக்க முடியும். அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், நம்பிக்கையை இழக்கவேண்டாம். உறுதியும் கடின உழைப்பும் பலனளிக்கும். காதல் துணையை வெளியே அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடகம்: இன்று நீங்கள் கடுமையாக நடந்துகொள்ள நேரிடலாம். பிற்பகலில் தொழில் கூட்டாளிகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் அதிகாரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால், முக்கியமான ஒப்பந்தத்தை முடிக்க முடியும்.

சிம்மம்: உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டாம். அதன் விளைவாக உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதேபோல், இணக்கமான அணுகுமுறையை கைவிட வேண்டாம். தொழில்முறை விவகாரங்களில் நிதர்சனமான, வர்த்தக ரீதியான அணுகுமுறையை தொடர்வது நன்மையளிக்கும்.

கன்னி: இன்று ஏற்படும் சில சிக்கல்களால் நீங்கள் எரிச்சலடையக் கூடும். உங்களுடைய ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஒரு படிப்பை நீங்கள் தொடர வாய்ப்புகள் இருக்கின்றன. பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களுடன் வெளியில் செல்வீர்கள்.

துலாம்: இன்று உங்கள் மனதில் பழைய நினைவுகள் அலைமோதும். கடந்த காலத்தின் நல்ல நினைவுகளை நினைவில் வைக்க விரும்புவீர்கள். ஒத்த எண்ணம் கொண்டவருடன் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. தத்துவம், மதம் என பலதரப்பட்ட விஷயங்களில் உங்கள் சிந்தனையை செலுத்துவீர்கள்.

விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு பல எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. பல மர்மங்களை சுலபமாக அவிழ்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும். தொழில் ரீதியான கூட்டங்கள் மற்றும் வர்த்த பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு உங்களுடையதாகவே இருக்கும்.

தனுசு: காதல் வாழ்க்கைக்கு உகந்த நாள் என்பதோடு, உங்கள் உள்ளம் கவர்ந்தவருடன் முழு நாளையும் செலவழிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கனவுக் கோட்டைகளை கட்டலாம். புதிய ஆடை வாங்கும் வாய்புள்ளது. ஒட்டுமொத்தமாக நீங்களும் உங்கள் நண்பர்களும் இணைந்து இன்றைய பொழுதை இனிமையாக கழிப்பீர்கள்.

மகரம்: இன்று நீங்கள் அமைதியாக அமர்ந்து கடந்த காலத்தில் செய்த தவறுகளை பற்றி சிந்திக்க வேண்டும். பணியிடத்தில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவீர்கள். இருந்தாலும், உங்கள் முயற்சிகள் கவனிக்கப்படாமல் அல்லது உரிய பாராட்டைபெறாமல் போகலாம். இது உங்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியும் என்பதால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.

கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். தத்துவங்கள், மதிப்புகள், அரசியல் என பல கருத்துக்களைப் பற்றி பேசுவீர்கள். இன்று உங்கள் காதல் துணையுடன் வெளியில் சென்று நேரத்தை செலவிடுவீர்கள்.

மீனம்: இன்று காதல் உறவுகளில் முக்கிய திருப்புமுனை இருக்கும். வீட்டிலும், அலுவலகத்தை போன்றே கடுமையாக உழைக்க வேண்டும் என்பதையும், கடின உழைப்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்வீர்கள்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகிருஷ்ணரை எப்படி எளிமையாக வீட்டிலேயே முறையாக வழிபாடு செய்வது?
Next Article ஜோதிட நாள்காட்டி 27.11.2025 | கார்த்திகை 11 – விசுவாவசு
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

3-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

Trending Posts

3-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 4, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.