Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»நிர்மலா சீதாராமனை சந்தித்த அருண் நேரு எம்பி. உண்மை என்ன தெரியுமா?
Featured

நிர்மலா சீதாராமனை சந்தித்த அருண் நேரு எம்பி. உண்மை என்ன தெரியுமா?

Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025Updated:December 10, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
meeting
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்பி அருண் நேரு சந்தித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் .

இந்நிலையில், அமலாக்கத்துறை கடிதத்துக்கு பயந்து பாஜக நிர்வாகிகளை சந்தித்தத்தாக தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் விமர்சித்த நிலையில், சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் எம்பி அருண் நேரு. அதில், கடன் வாங்கும் பொது மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் சேகரிக்க வேண்டும் எனவும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குடும்பங்களுக்கு பண தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே நிதியமைச்சர் சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், திமுக எம்பியும், கேஎன் நேருவின் மகனுமான அருண் நேரு நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அவரிடம் மனு அளித்தார்.

இது தொடர்பான பதிவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியீட்ட நிலையில் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இதனை அடுத்து அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்ததாக உள்ளிட்ட கட்சியினர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

இந்த நிலையில் தொகுதி மக்கள் நலனுக்காகவே மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக விளக்கம் அளித்திருக்கிறார் அருண். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” புதுதில்லியில், பொதுமக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் இரண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து நடவடிக்க எடுக்க வலியுறுத்துவதற்காக நான் மாண்புமிகு நிதியமைச்சரைச் சந்தித்தேன். கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில்  இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

பிஏசிஎல் லிமிட். மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துறையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்” என கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் மேலும் சில கோரிக்கைகள் குறித்தும் அருண் நேரு எம்பி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் காப்பீடு வழங்கும் வகையில் எல்ஐசி உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அருண் திட்டமிட்டு இருக்கிறார். அது தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் திட்டமிட்டு அதிமுக, தவெகவினர் அமலாக்கத்துறை சோதனையுடன் அருண்- நிர்மலா சீதாராமன் சந்திப்பை தொடர்புபடுத்தி பேசி வருவதாகவும் உண்மையில் தொகுதி மக்களின் கனவை நனக்காகவே அவர் மத்திய அமைச்சரை சந்தித்தார் என்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇட்லி, வடை சாப்பிட போனேன் ப்ரோ..விஜயை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி கொடுத்த விளக்கம்
Next Article SIR வரவேற்பு முதல் நீதித் துறைக்கு சவால்விடும் போக்குக்கு கண்டனம் வரை: அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

முருகனுக்கு அரோகரா..!! வளர்பிறை சஷ்டி இன்று..!! பக்தர்களால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்..!!

July 19, 2026

திருவள்ளூர் : ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..! நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!

July 17, 2026

உலகளந்த பெருமாள் கோவில்: திரிவிக்கிரம வடிவில் உலகை அளந்த புராதன தலம்..!!

June 24, 2026

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.