Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திமுகவை தீயசக்தி என்று அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Featured

திமுகவை தீயசக்தி என்று அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025Updated:December 19, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
mk stain eps 143937751
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

புரட்சித்தலைவர் எம்ஜிஆரே திமுகவை தீயசக்தி என்றும், மக்கள் விரோத ஏமாற்ற பேர் வழி கட்சி என்றும் அடையாளப்படுத்தினார். இந்த தீயை சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போரிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அதிமுக. திமுக மக்களுக்கு எதிரான ஆட்சி. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்பதுதான் திமுகவின் தாரக மந்திரம். ஒரு சில அரசியல் மேடைகளில் கடவுள் இல்லை என்று பேசுவார்கள். சில மேடைகளில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று நடிப்பார்கள்.

சிறுபான்மை பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கும், சிறுபான்மை மக்களின் வாக்குகளை தந்திரமாக பெறுவதற்கும் கபட நாடகம் ஆடுகிறது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எங்கள் கொள்கையில் நாங்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்போம். அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இருந்ததில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சாதி, மதம், இன மோதல்கள் இருந்ததில்லை” என்றார்.

தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசிய அவர், “அதிமுகவின் கூட்டணி கொள்கை என்பது தேர்தல் சமயத்தில் கட்சிகளுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் மட்டும்தான் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. சிறுபான்மையின மக்கள் இதை அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தது.

ஆனால், இப்போது பொய் வாக்குறுதிகளை அளித்து சிறுபான்மை மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு என்று எந்தவொரு நன்மையும் செய்யாமல், வாய்ச்சவடால் பேசி வாக்குகளை மட்டும் பெறக்கூடிய தந்திரவாதிகள் திமுகவினர். எனவே தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், திமுக ஒரு ‘தீயசக்தி’, மக்கள் விரோத ஏமாற்ற பேர் வழி என்று அப்போதே அடையாளப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் அந்த தீய சக்தியை எதிர்த்தார்.

எனவே சிறுபான்மை மக்கள் வருகிற தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதிமுகவுக்கு முழு ஆதரவு தரவேண்டும். அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். திமுக ஆட்சி என்பது வெறும் விளம்பர மாடல் ஆட்சிதான். விடியல் இல்லா, மக்களுக்கு எதிரான, மக்களை ஏமாற்றும் ஆட்சி” என்று விமர்சனம் செய்தார்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇந்த வாரம் எப்படி இருக்கும்? டிச.19- 25 வரையிலான வார ராசிபலன்கள்
Next Article 100 நாள் வேலை சட்ட விவகாரம்: டிச.24-ல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.