Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பழனி கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கில் குவிந்த முருகபக்தர்கள்
Featured

பழனி கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கில் குவிந்த முருகபக்தர்கள்

Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
003 palani koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, கோடை விடுமுறை மற்றும் சனிக்கிழமை வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

 ​திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இன்று சனிக்கிழமை வார இறுதி விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நிறைவடையும் தருவாய் என்பதால், பழனி மலைக்கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

003 palani koil A

 ​ அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக இயக்கப்படும் வின்ச் ரயில் நிலையங்கள் மற்றும் ரோப்கார் நிலையங்களில்  நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருக்கின்றனர்.

​அதேபோல், மலைக்கோயிலி உள்ள பொது தரிசன வழிகள் மற்றும் கட்டண தரிசன வழிகள் என அனைத்துப் பாதைகளிலும் பக்தர்களின் கூட்டம் இருக்கிறது. பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்திப் பரவசத்துடன் மூலவர் தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

​இன்று மாலை 4 மணிக்கு வைகாசி விசாகத் திருவிழாவின் சிகர நிகழ்வான மகா திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

 திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் பழனி நகர் மற்றும் மலைக்கோயில் பகுதிகளில்  பாதுகாப்பு ஏற்பாடுகளும், கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 

 

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்..!! பரவசத்தில் பக்தர்கள்..!!
Next Article ரத்தினகிரி பாலமுருகன் கோவில் தேரோட்டம்!. அமைச்சர்கள் பங்கேற்பு; பக்தர்கள் வடம் பிடித்து பரவசம்!
Editor TN Talks

Related Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

June 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – கும்பம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 19, 2026

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.