Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்
Featured

விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்

Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
006 pdk koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உள்ள ஸ்ரீஆத்மநாதசுவாமி கோவில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.10,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆத்மநாதா, மாணிக்கவாசகா என முழங்கி தேரை வடம் பிடித்து இழுத்தனர்..

உலக புகழ்பெற்றதும், மிகவும் பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஆவுடையார்கோவில் யோகாம்பாள் சமேத  ஸ்ரீ ஆத்மநாதசாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆனி மாத திருமஞ்சன திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதே போன்று இந்த ஆண்டு ஆனி மாத திருமஞ்சன திருவிழாவானது கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

006 pdk koil A

தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து,தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஆத்மநாதா, மாணிக்கவாசகா என்று பக்தி கோஷம் எழுப்பியும், தேவாரம் திருவாசகப் பாடல்களை பாடியும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது. திருத்தேரோட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அறந்தாங்கி மற்றும் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Aani Thirumanjanam Hindu Festival Spiritual News Temple Festival
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleநெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!
Editor TN Talks

Related Posts

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

விண்ணில் அதிர்ந்த  ஆத்மநாதா, மாணிக்கவாசகா முழக்கம் – ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் உற்சாகம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

Trending Posts

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மீனம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – கும்பம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 20, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – கன்னி

June 20, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.