தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலுவைத் தொகைகள் கைக்கு வர வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடையின்றி நகரும். உறவினர்களிடையே மதிப்பு கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் வேலைச்சுமை அதிகரிக்கலாம், கூட்டு வியாபாரத்தில் லாபம் உயரும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் சாற்றி வழிபடவும் விரும்பியது நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 8
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள்

