Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சதுரகிரிக்கு படையெடுத்த பக்தர்கள்..! 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி..!

திருநெல்வேலியில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் தல வரலாறு தெரியுமா? இமயம் விடுத்து அம்பிகை வந்த கதை..!

திருமலையில் ஜ்யேஷ்டாபிஷேகம் கோலாகலம்…  தங்கக் கவசத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருநெல்வேலியில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் தல வரலாறு தெரியுமா? இமயம் விடுத்து அம்பிகை வந்த கதை..!
Featured

திருநெல்வேலியில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் தல வரலாறு தெரியுமா? இமயம் விடுத்து அம்பிகை வந்த கதை..!

Editor 4 webBy Editor 4 webJune 27, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
4 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது அல்வா மட்டுமின்றி. நெல்லையப்பர் கோயிலும் தான். நெல்லையின் அடையாளம் இந்த நெல்லையப்பர் கோயில். சிவனை மூலவராக கொண்ட இக்கோயிலில், அம்பாளின் சிறப்பும் மிகவும் விஷேசம். பொதுவாக எல்லா கோயிலிலும் அம்பாள் அருள் மிகுந்தவள் என்று போற்றப்படுவாள். ஆனால் இத்தலத்து இறைவி, நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி தரக்கூடியவளகா காட்சித் தருகிறாள்.

நெல்லையப்பர் கோயில் :

இறைவன் – நெல்லையப்பர்
இறைவி – காந்திமதி அம்மன்
தீர்த்தம் – பொற்றாமரை தீர்த்தம் உட்பட 32 தீர்த்தங்கள்
தல விருட்சம் – மூங்கில்
இசைக்கருவி – சாரங்கி

அதிசயம் :

இக்கோயிலில் உள்ள தூண்கள் இசையை மீட்டக் கூடியதாக அமைந்துள்ளது. இத்தலத்தினை வேணுவனம், நெல்லூா், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகா், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுா்வேதி மங்கலம் என்றும் அழைப்பர்.

தல வரலாறு :

முன்பொருமுறை உமாதேவி, தான் படைத்த உலகத்தைக் காப்பதற்காக இறைவனை வேண்டித் தவம் இயற்றிட இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, கயிலை மலையினை விட்டு நீங்கி வேணுவனம் எனும் இவ்வடத்தை வந்து அடைந்தாள். கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைத்துத் தவமிருந்து, முப்பத்திரண்டு அறங்களையும் வளா்த்தாள். நெல்லை நாதனது திருவருள் கோலக்காட்சி எய்தி, அவரை மணந்தருளினாள்.

காந்திமதி அன்னை கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருநாமத்துடன் தவக்கோலம் கொண்டது. உயிர்களோடு இரண்டறக் கலந்து, சிவப்பெருவாழ்வு எய்துவதை அறிவுறுத்தற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிசி கொடுத்தது போன்ற பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது.

இங்கு மார்பில் சிவலிங்கம் தரித்த நெல்லை கோவிந்தா், வேணுவனநாதா் உடன் அருகருகவே ஒன்றாக காட்சிதருவதும் சிறப்பு. குழந்தைப்பேறு அருளும் பிள்ளைத்தொண்டு பாதையுடன் கூடிய பொள்ளாப் பிள்ளையார் சந்நிதி உள்ளது.

தாமிரசபை :

பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை இக்கோவிலில் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி தாமிரசபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது. உற்சவ மூா்த்தி தாமிர சபாபதி என்றும் மூலவா் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றார்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருமலையில் ஜ்யேஷ்டாபிஷேகம் கோலாகலம்…  தங்கக் கவசத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி
Next Article சதுரகிரிக்கு படையெடுத்த பக்தர்கள்..! 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி..!
Editor 4 web

Related Posts

சதுரகிரிக்கு படையெடுத்த பக்தர்கள்..! 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி..!

June 27, 2026

திருமலையில் ஜ்யேஷ்டாபிஷேகம் கோலாகலம்…  தங்கக் கவசத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி

June 26, 2026

பிரதோஷ வழிபாடு எதற்காக? சனி பிரதோஷத்தின் பலன்கள் என்ன?

June 26, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சதுரகிரிக்கு படையெடுத்த பக்தர்கள்..! 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி..!

திருநெல்வேலியில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் தல வரலாறு தெரியுமா? இமயம் விடுத்து அம்பிகை வந்த கதை..!

திருமலையில் ஜ்யேஷ்டாபிஷேகம் கோலாகலம்…  தங்கக் கவசத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி

பிரதோஷ வழிபாடு எதற்காக? சனி பிரதோஷத்தின் பலன்கள் என்ன?

பெரம்பலூர் : ஸ்ரீகம்பப் பெருமாள் கோயில் குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

Trending Posts

சதுரகிரிக்கு படையெடுத்த பக்தர்கள்..! 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி..!

June 27, 2026

திருமலையில் ஜ்யேஷ்டாபிஷேகம் கோலாகலம்…  தங்கக் கவசத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி

June 26, 2026

பிரதோஷ வழிபாடு எதற்காக? சனி பிரதோஷத்தின் பலன்கள் என்ன?

June 26, 2026

பெரம்பலூர் : ஸ்ரீகம்பப் பெருமாள் கோயில் குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

June 26, 2026

காஞ்சிபுரம் : வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட ஜெயந்தி உற்சவம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 26, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.