Author: Editor 4 web
தமிழ் மாதத்தில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில், தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோயிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் சிறப்பு வாய்ந்த மாதங்கள் ஆகும். அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். விரதமிருந்து அக்னி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்து படைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர். இக்கோயிலுக்கு தென் தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோயில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர்,…
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 47-ஆம் ஆண்டு ஆடிமாத 4-ம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு ஊரில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் படவேட்டம்மனுக்கு வேண்டுதல் செலுத்தும் விதமாக சுமார் 1,500 பால்குடம் எடுக்கும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக ஊரில் வசிக்கும் ஏராளமான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் வயதான முதியவர்கள் என 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே வன்னிவேடு பாலாற்றங்கரையில் இருந்து பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான ‘பூ கரகத்துக்கு’ சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் பால் குடங்களை தலையில் சுமந்து கொண்டு முக்கிய சாலையின் வழியாக “கழுகு” பார்வை காட்சியில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை திருவிழா கோலபோல ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் கருவறையில் உள்ள படவேட்டமனுக்கு காப்பு…
ஆம்பூர் பச்சக்குப்பம் மயிலாடும் மலை முருகர் கோவில் ஆடிக்கிருத்திகை விழாதிரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மயிலாடும் மலை முருகர் கோயில். பொதுவாக கிருத்திகை மாதங்களில் முருகருக்கு சிரப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடும் மலை முருகர் கோயிலில் ஆடி கிருத்திகை ஒட்டி சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன. இதில் முருகன் திருக்கோயிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வேண்டி ’அரோகரா அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் ஒன்று தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம். இந்த ஆலயத்தில் வருடா வருடம் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான 141-வது ஆண்டுத் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை பவனி, திருப்பலி நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று இரவில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் ஜி.ஏ.அனஸ்தாஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை, திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர் பவனி நடந்தது. இதனை தர்மகர்த்தா மரியராஜ் ஆசிரியர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான கிறிஸ்தவர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர். சென்னை, மும்பை, கேரளம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தேர் பவனியானது ஆலயத்தை…
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும் ஒன்று. இங்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். மேலும் பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் கார்த்திக்கை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா போன்றவை முக்கியமான விழாக்களாகும். அவ்வகையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் கோயிலில் விநாயகர் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தின் முன்பு பராசக்தி அம்மன் பக்தர்கள்…
திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் புனித நீராடி, பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், சொந்த ஊரில் புதிய வீடு கட்ட உள்ள சில பக்தர்கள், கோவில் முன்புள்ள கடற்கரையில் இருந்து ஒரு கைப்பிடி மணலை எடுத்துச் சென்று, பூமி பூஜை நடைபெறும் நாளில் அந்த மணலை பூஜையில் சேர்த்து வைத்து கட்டுமானப் பணிகளை தொடங்குகின்றனர். முருகப்பெருமானின் திருவடிகள் பட்ட புனித நிலத்தின் மணலை பயன்படுத்தி வீடு கட்டத் தொடங்கினால், அந்த வீடு செல்வச் செழிப்புடனும், இறையருளுடனும் அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், கோவில் முன்புள்ள கடலில் இருந்து புனித நீரையும் எடுத்துச் சென்று, பூமி பூஜையின்போது பயன்படுத்தும் வழக்கமும் பக்தர்களிடையே இருந்து…
ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை தினத்தன்று மகள் முருகருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு தான் சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்பர். ஆனால் அதே மாதம் முருகருக்கும் சிறப்பான நாளாக கிருத்திகை அமைகிறது. ஆடி கிருத்திகை : முருகப்பெருமானுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி விரதம், தை கார்த்திகை போன்ற நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த விதத்தில் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் ‘ஆடிக் கார்த்திகை’ என சிறப்பிக்கப்பட்டு, சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதுடன், பார்வதி தேவி, தனது சக்தி அனைத்தையும் திரட்டி முருகனுக்கு வேல் கொடுத்ததன் காரணமாக, ஆடிக் கார்த்திகை அன்று, வடிவேல் முருகனை…
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் இன்று “ஆடி பரணி” கிருத்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைரவேல் சேவல் கொடியுடன் தங்க ஆபரண அலங்காரத்தில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஆடி பரணி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் வேல் குத்திக்கொண்டும் கோவிலுக்கு வருகை தந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர் மேலும் ஆடி பரணி தினத்தை முன்னிட்டு ரத்தனகிரி சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி ஆற்காடு, வாலாஜா, வேலூர், ராணிப்பேட்டை, பூட்டதாக்கு, கலவை, திமிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான…
திருவள்ளூர் : பெரியபாளையம் அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்கல்..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது சுயம்புவாக எழுந்தருளியே புகழ்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி மாத திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், போன்ற தமிழகம் மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள புதுச்சேரி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பங்களுடன் பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து தங்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடி காணிக்கை செலுத்தி பொங்கலிட்டு ஆடு, கோழி என பலியிட்டு வேப்பஞ்சேலை ஆடைகளை அணிந்து கோவில் சுற்றி வலம் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பவானி அம்மனை தரிசனம் செய்து செல்வர். அந்த வகையில் இந்தாண்டும் ஆடி மாதம் பிறந்தது முதல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர். நேற்று 3வது வாரத்தை முன்னிட்டு பவானி…
இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் வருடத்தில் அனைத்து நாட்களும் பக்தர்களின் கூட்டம் இங்கு அலைமோதும். அதேப்போல இங்கு எப்போதும் ஏதேனும் ஒரு திருவிழாவும் நடந்துக் கொண்டே இருக்கும். அப்படி நடைபெறும் விழாக்களில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் இந்தாண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடர்பாக தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. முதலில் செப்டம்பர் மாதம் 15 முதல் 23-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா, தொடர்ந்து அக்டோபர் மாதம் 12 முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முன்னதாக செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம்…
