Author: Editor 4 web

முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. பல நாட்களாக கோயில் கோபுரங்கள் உட்பட கட்டமைப்புகள் புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு ஜூன் 30ம் தேதியன்று மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் இணைந்து இந்த குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதிகாலையில் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். சுவாமி தரிசனம் செய்தபிறகு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், ”பழமுதிர்ச்சோலை குடமுழுக்கு நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் கூறினார். அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் அரோகரா என…

Read More

திருச்சி அருகே உள்ள ஸ்ரீ அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி பூஜை நடைபெற்றது. திருச்சி மாவட்டம் முசிறி கள்ளர்தெருவில் திருச்சி சாலை அருகில் ஸ்ரீ அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு பல்வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு வராகி அலங்காரம் செய்யப்பட்டது பொதுமக்கள் வாழை இலையில் பச்சரிசி பரப்பி தேங்காயை உடைத்து வைத்து அதில் விளக்கேற்றி பாடல்கள் பாடி வராகியை வழிபாடு செய்தனர் பின்னர் விநாயகர் கருப்பண்ணசாமி வராகி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பெரும்பாலான கோயில்களில் மதிய நேரம் நடை சாற்றப்படுவது வழக்கம். ஆனால் காலையில் நடை அடைக்கப்படாத கோயில் ஆதிதிருவரங்கம் கோயில். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் கோயில். இங்குள்ள மூலவர் ஸ்ரீரங்கநாதர் 29 அடி நீளத்தில் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். பகலில் மூடப்படாத பழமையான இத்தலம் 10 திவ்ய தேசங்களை விடவும் முற்பட்டது என நம்பப்படுகிறது. வரலாறு : அசுரகுல வம்சத்தில் தோன்றி ஆட்சிபுரிந்து வந்த சோமுகன் என்னும் அசுரன் மிகவும் கடுமையான தவங்களை செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான். அசுர குலத்துக்கே உரிய ஆவணமும், அரக்கத்தனமும் அவனுக்கு இருந்தது. பூவுலகையும், தேவலோகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும். முனிவர்களும், தேவர்களும் தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினான். அவ்வாறே பூவுலகம், தேவலோகம் எல்லாவற்றையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி தனக்கு சேவை…

Read More

திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. அந்த வகையில் முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயில் இக்கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக அணுக்ஞை, விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தி பூஜைகளும், இரண்டாம் நாள் யாக பூஜை மற்றும் தீபாரதனையும், மூன்றாம் நாள் காலை யாக பூஜை வேதிகார்ச்சனை, மண்டப பூஜைகள், திரவ்ய ஹோமம் பூர்ணாஹூதி, தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து நான்காம் கால யாக பூஜைகள் திரவ்ய ஹோமம், மகா பூர்ணா ஹூதி தீபாராதனையும், இதனைத் தொடர்ந்து விமானம், மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி எனும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர்கள், நிர்வாகம், முருகனடியார்கள், இறை அன்பர்கள் மற்றும்…

Read More

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தின் திருப்பணி பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்று மகா குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 3 நாட்களாக 4-கால யாகசாலை பூஜைகளும், யாக வேள்விகளும் நடத்தப்பட்டன. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய சிவாச்சாரியார்கள் புனித தீர்த்த கடங்களை சுமந்து ஆலயத்தினை வலம்வந்து மூலஸ்தான கோபுர விமான கலசத்தை அடைந்தனர். பின்னர் கோபுர விமான கலசத்தின் மீது வண்ண வண்ண மலர்களால் சிறப்பு பூஜைகளை நடத்திய சிவாச்சாரியார்கள் தொடர்ந்து கோபுர விமான கலசங்கள் மீது கடங்களில் இருந்து புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோபுர விமான கலசத்திற்கு மகா தீபாராதனை…

Read More

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகள் வரலாறு கொண்டது. உலக அளவில் இல்லாத வகையில் ஓர் தனி சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு.. தல வலாறு : முன்பொரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்த பகுதியில் வழக்கம் போல ஒரு விவசாயி தனது வயல்களை உழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. பின்னர் அங்கு தோண்டிப்பார்க்கும் பொது சுயம்பு வடிவில் அம்மன் வெளிப்பட்டார். பின்னர் ஒருவருக்கு அருள்வாக்கு வந்து கோயில் கட்டுமாறு உத்தரவு வரவே, மக்கள் ஒன்றுக் கூடி கோயில் அமைத்தனர். பெயர் வந்த வரலாறு : உலக அளவில் இல்லாத அளவிற்கு, இந்த கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக மாரியம்மன் கோயில்களில் திருவிழா காலங்களில் மட்டுமே கம்பம் நடுவது வழக்கம். ஆனால், இந்த கோயிலில் மட்டுமே மூன்று கிளைகள் கொண்ட மரக்கம்பம் எப்போதும் அம்மன் சன்னதியின் முன்பாக நிரந்தரமாக…

Read More

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு ஊராட்சியில் உள்ளது பிச்சைக்கொடை ஐய்யனார் கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 29-ம் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு முதல் முதல் யாகசாலை பூஜைகள் சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்ற நிலையில் வேத விற்பன்னர்களின் வேத மந்திரங்கள் முழுங்க , இன்னிசை முழக்கங்களோடு வலம் வந்து கும்பகலசத்தை அடைந்து பிச்சைக்கொடை ஐய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி மஹா குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Read More

உலகளந்த பெருமாள் கோயில் என்றாலே தமிழ்நாட்டில் தனி புகழ் தான். கள்ளக்குறிச்சி மாவட்ட, திருக்கோவிலூரில் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நடுநாட்டு திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது இந்த உலகளந்த பெருமாள் கோயில். இக்கோயிலில் சாமி சன்னதிகள், கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வரும் 5-ம் தேதி கோயில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் முன்னிலையில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 29-ந் தேதி கோவிலில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் பூமாதேவி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் தொடங்கின. முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

சென்னையில் உள்ள பேராலயங்களில் புகழ்பெற்றது சாந்தோம் புனித தோமையார் பேராலயம். இங்கு நாள்தோறும் நூற்றுகணக்கானோர் திருப்பலியில் கலந்து கொள்கின்றனர். பல வேண்டுதல்களை முன்வைத்து உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த பேராலயத்திற்கு வருகை தருகின்றனர். இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் நடத்தினார். நேற்று தொடங்கிய இந்த பெருவிழா, வருகிற 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) குடும்ப விழாவாக நடக்கிறது. இதனையொட்டி மாலை 5.30 மணிக்கு பாதிரியார்கள் இக்னேஷியஸ் தாமஸ், ஐசக் பால், கிரித் மேத்தியூஸ், ஜோ நிர்மல் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நடத்த இருக்கிறார்கள். நாளை (வெள்ளிக்கிழமை) நற்கருணை பெருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கும்…

Read More

பொதுவாக தமிழ்நாட்டில் சிவன் கோயில்களில் அனைத்து கிரங்களுக்கும் சேர்த்து தனி சன்னதிகள் அமைக்கப்படுவது உண்டு. அதேப் போல ஒவ்வொரு கிரகங்களுக்கான பரிகாரங்கள் ஒவ்வொரு கோயிலில் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில், ராகு பகவானுக்குரிய பரிகாரத் தலங்களில் மிக முக்கியமானது திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். மங்கள ராகு : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது இக்கோயில். பொதுவாக மற்ற கோவில்களில் ராகு பகவான் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பார். ஆனால், திருநாகேஸ்வரத்தில் தனது தேவியர்களான நாகவல்லி மற்றும் நாககன்னியுடன் ’மங்கள ராகு’ என்ற சாந்தமான கோலத்தில் காட்சி தருகிறார். கோயிலின் சிறப்புகள் : பெரும்பாலும் மனித தலை மற்றும் பாம்பு உடல் கொண்ட உருவமாகவே ராகுவை காண முடியும். ஆனால், இத்தலத்தில் ராகு பகவான் மனித வடிவில் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு. அம்பாள் சன்னதி : இக்கோவிலில் அன்னை கிரிகுஜாம்பிகை மூன்று விதமான அலங்காரங்களில், அதாவது காலையில் சிறுமி, மதியம் இளம்பெண், மாலையில்…

Read More