Author: Editor 4 web
சித்தர்கள் என்பவர்கள் மனிதர்களை போன்றே உலகில் பிறந்தாலும் கூட, அவர்களது ஞானம் என்பது சாதாரண மனிதர்களை போல் அல்லாமல், தங்களுக்கென்று தனி வாழ்வியல் முறைகளை உருவாக்கி இயற்கையோடு இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாழ்ந்திருந்தாலும், முதலில் அகத்தியர் பின் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர். இவரே தமிழ்ச் சித்தர் பரம்பரையின் தலைவராக விளங்குகின்றார். அவருக்குப்பின் காலந்தோறும் சித்தர்கள் பலர் ஆங்காங்கே தோன்றி வருகின்றனர். மருதாசல மருதம்மா சித்தர் : இப்படி சித்தர்களாக வாழ்ந்து ஜீவசமாதி ஆனவர்கள் தான், ஈரோட்டில் உள்ள மருதாசல மருதம்மா சித்தர். சத்தியமங்கலம் அடுத்த தனவாசி ரோடு அம்மன் கோயில் தோட்டத்தில் அமைந்துள்ள இவர்களது சமஸ்தானத்தில், தவத்திரு கந்தசாமிகவுண்டர் அய்யா, தவத்திரு பூவாத்தாள் அம்மை பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர். சிலைகள் : இங்கு நவகிரக கணபதி விநாயகர், பகவதி அம்மா சத்ய லோக பிரம்மா, சரஸ்வதி, பண்ணாரி அம்மன்,…
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தல வரலாறு உள்ளது. பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஏற்றவாரு ஒவ்வொரு கோயிலில் அவற்றிற்கு ஏதேனும் ஒரு பரிகாரமோ அல்லது அந்தக் கோயிலுக்கு சென்று வந்தால், குறிப்பிட்ட பிரச்னைகளில் இருந்து மனிதனுக்கு விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகமாக நம்பப்படுகிறது. அப்படி விஷக்கடியில் இருந்து நிவர்த்தி தரும் கோயிலாக கருதப்படுகிறது கந்தசாமி திருக்கோயில். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், காளிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த கந்தசாமி கோயில். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் முருகன் கந்தசாமி என்ற பெயரோடு அருள்பாலிக்கிறார். தல வரலாறு : திண்டுக்கலில் உள்ள பழநி சென்று பழநி ஆண்டவரை தரிசிப்பது என்பது பக்தர்களின் வாழ்வில் ஒரு பொற்கால அனுபவமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்தப் பழநியில் வீற்றிருக்கும் கந்தனை காளிப்பட்டிக்கு வரவழைத்த பெருமை லட்சுமணன் என்ற பக்தருக்கே உரியது. தன் சிறிய குடிசையில் காவடியை நிறுவி தினமும் பூஜை செய்து…
உலகப் பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடைபெற்றது. வெள்ளி சந்திர பிறை வாகனம், தங்க சூரிய பிறை வாகனம், பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி யானை வாகனம், தங்க கைலாச வாகனம் என நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 20-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்ற நிலையில், தேரோட்டம் முடிந்ததும் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ரகசிய அறையில் எழுந்தருளினர். அங்கு நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6…
சென்னைக்கு அடுத்தப்படியாக ஐடி வேலைவாய்ப்பில் வளர்ந்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது கோவை. இங்கு பல பாரம்பரியமான, வரலாறு மிக்க கோயில்களும் உள்ளது. அப்படியான கோவையின் அடையாளமாய் திகழும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பல்வேறு அதிசயங்களை தனக்குள் வைத்திருக்கிறது இந்தக் கோயில். அவற்றில் சில.. * பிறவாப்புளி : பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் புளியமரம் ஒன்று உள்ளது. இந்தப் புளிய மரத்தின் விதைகளை எங்குப் போட்டாலும் முளைக்காதாம் அதேப் போல இம்மரத்தின் இலைகள் இரவில் தூங்குவதில்லையாம். இலைகள் மடிவதும் இல்லாததால், இதனை பிறவா நிலை தடும் தலம் என்பதை குறிக்கிறது. ஆகையால் இந்த மரத்திற்கு பிறவாப்புளி என்ற பெயர் வந்தது. * புழு வராத சாணம் : பொதுவாக மாட்டு சாணத்தில் சில மணி நேரத்தில் புழுக்கள் வரும். ஆனால் இக்கோயிலில், காமதேனு வாழ்ந்த இடம் என்பதால், இங்கு வளர்க்கும் மாடுகளின் சாணத்தில் எத்தனை நாட்கள் ஆனாலும்…
மதுரை என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் கள்ளழகர் கோயில். இந்த கோயில்களை தாண்டி சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு வைணவத் தலமும் மதுரையில் பிரபலமானதே. அதுதான் மதுரை மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி திருக்கோயில். இந்த தலத்தின் வரலாறு பற்றி விரிவாகப் பார்க்கலாம்..! வரலாறு : மதுரையில் சிவபெருமான் மீனாட்சி அம்மனை திருமணம் செய்துவிட்டு, சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தீவிர சிவபூஜை செய்தார். பூஜை செய்யும்போது, சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்தார். இதனால் சிவபெருமான் உடலில் வெப்பம் அதிகமாகி, அது அக்னி ஜூவாலையாக மாறி உலகை பாதித்தது. இதனால் அச்சம் அடைந்த தேவர்கள், பிரம்மதேவரின் தலைமையில் மகாவிஷ்ணுவிடம் சென்று உலகை காக்கும்படி வேண்டி நின்றனர். சிவபெருமானின் தியானத்தை கலைத்தால் மட்டுமே, அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றங்கரையில் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய், புதன் மற்றும் இன்று வியாழன் ஆகிய 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் கூழ் அமுது படைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இத்திருவிழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் செய்து வணங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுயம்பு திருப்பதி கெங்கை அம்மன் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை மேளதாளங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு சிரசு அம்மனுக்கு அலங்காரம் ஆராதனை செய்து அதிகாலை முதல் அம்மன்…
கடவுள்களில் முதன்மையான கடவுள் என்றால் அது விநாயகர் தான். மக்கள் எந்த நல்ல காரியம் செய்தாலும் முதலில் விநாயகரை வைத்தே தொடங்குவர். இவ்வளவு ஏன் நோட்டு புத்தகங்களில் எழுதத் தொடங்குவதற்கு முன்பு கூட பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவர். எப்படியான கோயில்களிலும் முதன்மையாக இருப்பவர் விநாயகரே. அவருக்கான தனி இருப்பிடம் இருந்தே தீரும். அப்படி இருக்க, விநாயகருக்கென்றே சிறப்பு கோயில்களும் இங்கு நிறைய உண்டு. அப்படி போற்றப்படும் கோயில்களில் ஒன்று புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில். நாட்டிலேயே கோபுரம் முழுவதும் தங்கத்ஹால் வேயப்பட்ட கோயில் மணக்குள விநாயகர் கோயில் மட்டுமே. பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கி.பி.1688-ல் பிரெஞ்சுக்காரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே அனைவரும் அறிந்த புதுவை மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேற்குப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும், அது கடற்கரைக்கு அருகே இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக…
பொதுவாக ஒவ்வொரு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் அன்று அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். பால், மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், தயிர் என மங்களகரமான பொருட்களை கொண்டு ஒவ்வொரு நேரத்தில் அபிஷேகங்கள் நடைபெறும். அப்படி செய்யப்படக் கூடிய அபிஷேகங்களால் பக்தர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள், பலன்கள் என்னென்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்..! * தூய்மையான நீர் : தூய்மையான நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை காண்பதாலும், அந்தத் தீர்த்தத்தைப் குடிப்பதாலும் மனம் சாந்தி அடையும். * நல்லெண்ணெய் : மூலவருக்கு நல்லெண்ண்ய் கொண்டு அபிஷேகம் செய்யும் போது பக்தி உணவு மேலோங்கும். * வாசனை திரவியங்கள் : நறுமணம் மிக்க வாசனை திறவியங்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியமான வாழ்வு அமையும். * பசு நெய் : தூய்மையான பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் மோட்சம் கிடைக்கும். * பஞ்சாமிர்தம் : பழங்களால் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தால் உடல் பிணிகள் நீங்கி, நீடித்த ஆயுள்…
காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, இன்று காலை கோவில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக மந்திரங்கள் ஓதப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். பிரமோற்ச்வத்தின் பத்து நாட்களும் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் வழக்கத்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். முக்கிய நிகழ்வான வரும் 19ஆம் தேதி காலை பூத வாகனமும், 21 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவம், 23ஆம் தேதி தேரோட்டமும், 29ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது…
கோயில் நகரமாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், ஆனி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வெள்ளித்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், செண்டை மேளதாளங்கள் முழங்க, முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளினார். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், வெள்ளை நிற பட்டாடை அணிந்து, வைரம் மற்றும் வைடூரிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் “அரோகரா… அரோகரா…” என பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு வெள்ளித்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்த வெள்ளித்தேரில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
