Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»நாமக்கல் : உலகில் இல்லாத அளவில் சிறப்பு கொண்ட கோயில் பற்றி தெரியுமா? சுமங்கலி மாரியம்மன் வழிபாடு..!
Featured

நாமக்கல் : உலகில் இல்லாத அளவில் சிறப்பு கொண்ட கோயில் பற்றி தெரியுமா? சுமங்கலி மாரியம்மன் வழிபாடு..!

Editor 4 webBy Editor 4 webJuly 3, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
6
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகள் வரலாறு கொண்டது. உலக அளவில் இல்லாத வகையில் ஓர் தனி சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு..

தல வலாறு :

முன்பொரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்த பகுதியில் வழக்கம் போல ஒரு விவசாயி தனது வயல்களை உழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. பின்னர் அங்கு தோண்டிப்பார்க்கும் பொது சுயம்பு வடிவில் அம்மன் வெளிப்பட்டார். பின்னர் ஒருவருக்கு அருள்வாக்கு வந்து கோயில் கட்டுமாறு உத்தரவு வரவே, மக்கள் ஒன்றுக் கூடி கோயில் அமைத்தனர்.

பெயர் வந்த வரலாறு :

உலக அளவில் இல்லாத அளவிற்கு, இந்த கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக மாரியம்மன் கோயில்களில் திருவிழா காலங்களில் மட்டுமே கம்பம் நடுவது வழக்கம். ஆனால், இந்த கோயிலில் மட்டுமே மூன்று கிளைகள் கொண்ட மரக்கம்பம் எப்போதும் அம்மன் சன்னதியின் முன்பாக நிரந்தரமாக இருக்கும். இந்தக் கம்பம் அம்மனின் கணவரைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இக்கோவிலில் அம்மன் எப்போதும் தனது கணவரை தரிசித்து கொண்டபடி இருப்பதால், இவருக்கு ”நித்திய சுமங்கலி” என்ற பெயர் வந்தது. பெண்கள் இக்கோயிலுக்கு சென்று வழபட்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு.

கோயில் சிறப்பு :

இந்த கோவிலில் உள்ள கம்பத்தை வழிபட்டு தயிர் சாதம் நைவேத்தியம் செய்து பிரசாதமாக உட்கொள்ள, ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கண் நோய்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து நலம் பெற இத்தலத்து அம்மனை வழிபடுவது நலம் தரும்.

கணவன்மார்களின் உடல் நோய்வாய்ப்பட்டிருந்தால் இக்கோவிலுக்கு சென்று கொடிமரத்தில் பாலோ அல்லது தண்ணீரோ ஊற்றி வழிபடுவது நல்ல மாற்றத்தை தரும்.

திருவிழாக்கள் :

ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா நடைபெறும். 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வருவாள். குறிப்பாக பூச்சாட்டு விழாவில் அம்மனை மலர்களால் நிரப்பி விழா எடுப்பார்கள்.

கம்பம் நடும் நாளில் புதிய கம்பம் மாற்றப்பட்டும். பின்னர் அக்கினி சட்டி எடுத்தல், தீமிதித்தல், அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் போன்று இந்த 15 நாட்களும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

ஒவொரு மாதங்களிலும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. காய்கனி அலங்காரம், வெற்றிலை அலங்காரம், வேப்பிலையாடை அலங்காரம், வளையல் பூஜை(வளைகாப்பு), விளக்கு பூஜை போன்றவை நடைபெறும்.

மேலும் நவராத்திரி கொலுவிலும், நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்து அருள்புரிவாள்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருச்சி: ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
Next Article திருவாரூர் : புராதன சிறப்புமிக்க மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம்..! குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்..!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.