Author: Editor 4 web

பொதுவாக தமிழ்நாட்டில் சிவன் கோயில்களில் அனைத்து கிரங்களுக்கும் சேர்த்து தனி சன்னதிகள் அமைக்கப்படுவது உண்டு. அதேப் போல ஒவ்வொரு கிரகங்களுக்கான பரிகாரங்கள் ஒவ்வொரு கோயிலில் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில், ராகு பகவானுக்குரிய பரிகாரத் தலங்களில் மிக முக்கியமானது திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். மங்கள ராகு : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது இக்கோயில். பொதுவாக மற்ற கோவில்களில் ராகு பகவான் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பார். ஆனால், திருநாகேஸ்வரத்தில் தனது தேவியர்களான நாகவல்லி மற்றும் நாககன்னியுடன் ’மங்கள ராகு’ என்ற சாந்தமான கோலத்தில் காட்சி தருகிறார். கோயிலின் சிறப்புகள் : பெரும்பாலும் மனித தலை மற்றும் பாம்பு உடல் கொண்ட உருவமாகவே ராகுவை காண முடியும். ஆனால், இத்தலத்தில் ராகு பகவான் மனித வடிவில் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு. அம்பாள் சன்னதி : இக்கோவிலில் அன்னை கிரிகுஜாம்பிகை மூன்று விதமான அலங்காரங்களில், அதாவது காலையில் சிறுமி, மதியம் இளம்பெண், மாலையில்…

Read More

மதுரையில் இந்து கோயில்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு எண்ணற்ற பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன. அதில் ஒன்றுதான் பழைய குயவர் பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம். இந்த ஆலயத்திற்கு மதுரை மட்டுமின்றி சிவகங்கை உட்பட அருகேயுள்ள மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகை தருவர். சிறப்பு வாய்ந்த 13 : இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தோணியாருக்கு மிகவும் பிடித்த எண் 13. ஆதலால் இங்கு என்ன நிகழ்வு நடைபெற்றாலும் 13 எண்ணை அடிப்படையாக கொண்டு நடைபெறும். 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை உட்பா பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். விழாவின் முக்கிய நிகழ்வாக 12-வது நாள் தேரோட்டம் நடக்கிறது. அதேபோல இந்த ஆலயத்தில் முதல் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறும். காணாமல்…

Read More

குப்பை கழிவுகளாக காட்சியளித்த சத்திரம் குளக் கரையை பலப்படுத்தி சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்தி இருக்கின்றனர் தண்டலம் ஊராட்சி கிராம மக்கள். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அமைந்துள்ள சத்திரம் குளம். மிகவும் பழமை வாய்ந்த இக்குலத்தின் தண்ணீரை தண்டலம் மற்றும்  திருப்போரூர் உள்ளிட்ட கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக குளக்கரை சீரமைக்கப்படாமல் குளத்தின் கரைகள் மீது மது பிரியர்கள் மது அருந்தி செல்வதால் குளக்கரை சுற்றி குப்பை கழிவுகள்,  பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து குளற்று நீர்  துர்நாற்றம் வீசியது. தண்டலம் கிராம மக்கள் வேண்டுதலுக்கு இணங்க ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஏற்பாட்டில் கிராம மக்கள் உதவியோடு குளக்கரை வலுப்படுத்தப்பட்டு, குளத்து நீரில் உள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர் குளக்கரை மீது அமைந்துள்ள ஸ்ரீ கங்கையம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு கூழ் வாத்தல் திருவிழாவுடன்…

Read More

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மொஹரமை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், வரலாறு காணாத வகையில் திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வைகுந்தம் தங்கும் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் தரிசன வரிசையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பச்சி கல்வ கங்கம்மா கோவில் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் கட்டம், கட்டமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, பால் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் உடல்நிலை பாதிக்கபட்டால் சிகிச்சை அளிப்பதற்காக ஆங்காங்கே நடமாடும் மருத்துவ…

Read More

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆனி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர். மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று விதியை வெல்லும் ஆனி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு பல்வேறு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சனி பிரதோஷ வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்கள் வரிசையில் அமர்ந்து நந்தியம்பெருமானை வழிப்பட்டனர். மேலும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூக்கள், அருகம்புல், இவற்றை மாலையாக்கி நந்தியம்பெருமானுக்கு…

Read More

தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் மலையின் மேல் தான் அமைந்துள்ளன. அதிலும் ஒரு சில கோயில்களில் படிகள் இருக்காது. மலையின் அழகை ரசித்துக் கொண்டே டிரக்கிங் போல அந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும். அப்படியான ஒரு கோயில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது இந்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனை எதிர்த்து மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்ரம் முந்தைய நடைமுறை படி மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு தலா 4…

Read More

திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது அல்வா மட்டுமின்றி. நெல்லையப்பர் கோயிலும் தான். நெல்லையின் அடையாளம் இந்த நெல்லையப்பர் கோயில். சிவனை மூலவராக கொண்ட இக்கோயிலில், அம்பாளின் சிறப்பும் மிகவும் விஷேசம். பொதுவாக எல்லா கோயிலிலும் அம்பாள் அருள் மிகுந்தவள் என்று போற்றப்படுவாள். ஆனால் இத்தலத்து இறைவி, நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி தரக்கூடியவளகா காட்சித் தருகிறாள். நெல்லையப்பர் கோயில் : இறைவன் – நெல்லையப்பர் இறைவி – காந்திமதி அம்மன் தீர்த்தம் – பொற்றாமரை தீர்த்தம் உட்பட 32 தீர்த்தங்கள் தல விருட்சம் – மூங்கில் இசைக்கருவி – சாரங்கி அதிசயம் : இக்கோயிலில் உள்ள தூண்கள் இசையை மீட்டக் கூடியதாக அமைந்துள்ளது. இத்தலத்தினை வேணுவனம், நெல்லூா், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகா், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுா்வேதி மங்கலம் என்றும் அழைப்பர். தல வரலாறு : முன்பொருமுறை உமாதேவி, தான் படைத்த உலகத்தைக் காப்பதற்காக இறைவனை வேண்டித்…

Read More

பிரதோஷம் : சிவனை வழிபடுவதில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதில் ஒன்று தான் பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிரை திரயோதசி திதியில் பிரதோஷ நாள் வருகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு 3 நாட்களுக்கு முன் வரும். அந்த வகையில், ஒரு மாதத்தில் இருமுறை பிரதோஷ தினங்கள் வரும். திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த பிரதோஷ நாட்களில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. பிரதோஷ வரலாறு : அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் வைத்து திருபாற்கடலை கடைந்தனர். தேவர்களும், அசுரர்களும் இரு பக்கமும் நின்று இழுக்க, மலையில் உடல் அழுந்தி ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட்டது.…

Read More

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில்ஸ்ரீ விநாயகர் பூதேவி ஸ்ரீதேவி ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய பழமை வாய்ந்த கம்பப் பெருமாள் கோயில் உள்ளது, இக்கோவிலை புனரமைக்கும் பணி கடந்தாண்டு தொடங்கியது. இதில் ஐதீக முறைப்படி சுதை வேலையுடன் கூடிய பெருமாள் கோவில் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. மேலும் நுழைவாயில் அமைத்து வர்ணம் பூசி கோவில் பணிகள் முடிவடைந்த நிலையில் அதற்கான மகா குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில் நேற்று மாலை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தியுடன் பூஜை தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் யாகம் வளர்த்து பூர்ணாகூதி முடிந்து கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டன. அங்கு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா…

Read More

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் ஆனி மாதம் கருட ஜெயந்தியை முன்னிட்டு ஆனி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3ம்நாள் கருடசேவையும், அதே போல ஆனி மாதம் ஆனி கருட சேவையும்,ஆடி மாதம் ஆடி கருடசேவையும் என ஆண்டிற்கு 3 முறை கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் கருட ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஆனி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கருட சேவை உற்சவத்தை யொட்டி வரதராஜப்பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, கத்திரி பூ நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ மனோரஞ்சித பூ மல்லிகைப்பூ ரோஜா பூ உள்ளிட்ட மலர் மாலைகள், திருவாபரணங்கள், முத்து கிரீடம்…

Read More