Author: Editor 4 web

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கி வரும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ வஞ்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு இன்று ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு 30-லட்சம் ரூபாயில் மஹாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் , 100 ரூபாய், 200 ரூபாய்,மற்றும் 500 ரூபாய் நோட்டுகளிலும் அதோபோன்று பழைய 10 ரூபாய் ,50 ரூபாய் நோட்டுகள் என மொத்தமாக 30 லட்சம் ரூபாயில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மஹாலட்சுமி அலங்காரத்தை கான வஞ்சூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Read More

ராணிப்பேட்டை மாவட்டம், நபலாக் புளியங்கண்ணு ஏரிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) உத்திராடம் நட்சத்திரத்தில், காலை சுமார் 10 மணியளவில் திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி திருக்கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி பூஜை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கலசங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, 108 திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ கன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும்…

Read More

மதுரை மாவட்டத்தின் அடையாளம் என்றால் அது அழகர்கோயில் எனலாம். மீனாட்சி அம்மன் கோயில் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதே அளவு கள்ளழகர் கோயிலும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களும் மிகவும் பிரபலம். இக்கோயிலின் ஆடி பெருந்திருவிழா கடந்த 21-ம் தேதி காலை மங்கள இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது. உற்சவர் கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை கண்காணிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை…

Read More

பௌர்ணமியை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மிக பெரிய ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்து முன் செல்ல அவரை பின் தொடர்ந்து பல ஆயிர்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரியக் கோவிலில் தென்திருக்கயிலாய பாதையில் ஓம் நமச்சிவாயா என உச்சரித்தவாறு தென் கைலாய வலம் வந்தனர். பெளர்ணமி முன்னிட்டு, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் மராட்டா நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து தென் கைலாய வலம் தொடங்கியது. நாதஸ்வர இசை, ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்து செல்ல அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரியக்கோவில் தென்திருக்கயிலாய பாதையில் ஓம் நமச்சிவாயா என உச்சரித்தவாறு தென் கைலாய வலம் வந்தனர்.

Read More

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் செயல்பட்டு வரும் சௌராஷ்ட்ரா ஓம் முருகா புஷ்ப காவடி சங்கத்தின் சார்பில், முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக போற்றப்படும் ஆடிக்கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் பக்தி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் வரும் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தினந்தோறும் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் மஹா தீபாராதனைகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும், முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்புமிக்க நாளாக கருதப்படுவதாலும், காலை முதலே பக்தர்கள் திரளாகக் கோவிலுக்கு வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஓம் முருகா புஷ்பர் காவடி சங்கத்தினர் “அரோகரா” என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி…

Read More

திருப்பத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், புதிய கொடி மரம் பூஜை அம்மனுக்கு செங்கோல் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் ராமக்கா பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், புதிய கொடி மரம் பூஜை, அம்மனுக்கு செங்கோல் வழங்குதல் போன்றவை சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் மற்றும் பாலபிஷேகம் கொண்டு அம்மனுக்கு தீபாரதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் அகத்தியர் முனிவரால் வழிபட்ட திருத்தலமாகப் போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல், அகத்தீஸ்வரர் மற்றும் புவனேஸ்வரி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.‌ பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் வன்னிவேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை…

Read More

”குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வம்”. ஒவ்வொரு குடும்பத்திற்கும் எப்படி முன்னோர்களின் வரலாறு இருக்கிறதோ அதேப்போல, முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வத்தின் வரலாறும் நிச்சயம் இருக்கும். அப்படியான குலதெய்வத்தை ஒவ்வொரு மனிதரும் வருடத்திற்கு ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்து வருவர். பெற்ற தாயைப் போன்று பிள்ளைகள் கேட்காவிட்டாலும் அவர்களின் தேவை அறிந்து அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கும் சக்தி குலதெய்வத்திற்கு உண்டு என்பது நம்பிக்கை. ஆகையால் தான் எந்தக் காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் என முன்னோர் கூறுவர். அதேப் போல, ஒருவரது குலம் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானாலும் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம். வேரின்றி மரங்கள் செழிப்பதில்லை; அதுபோல குலதெய்வ வழிபாடின்றி வாழ்வு சிறப்பதில்லை என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அப்படியான குலதெய்வத்தை அவரவர் வழிபடும் முறைகளோடு வழிபட வேண்டும். ஒரு சில குலதெய்வங்களுக்கு சைவமும், ஒரு சில குலதெய்வங்களுக்கு அசைவமும் பிடித்ததாக இருக்கும். அப்படியிருக்க, அவரவர் குலதெய்வத்தின்…

Read More

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைக்கட்டும். அனைத்து விதமான அம்மன் கோயில்களிலும் ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அத்தோடி ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் தரப்படும் பிரசாதங்களில் முதன்மையானது கூழ். கம்மங்கூழ் வார்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே காற்றும், வெப்பமும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவும் மாதம் இது. இந்த சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால், அம்மன் வழிபாடு ஆடி மாதத்தில் செய்யப்படுகிறது. அதேபோல், அம்மனுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் வீட்டில் செய்யப்படுகின்றன. இந்த நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கப் பழக்கப்படுத்தினார்கள். தலைக்கு குளிப்பதும் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் வழக்கமாயிற்று. ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலட்சுமி பூஜை என்றெல்லாம் பூஜைகளும் புனஸ்காரங்களும் அமர்க்களப்பட, அதற்கேற்ற உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிட…

Read More

இந்தியாவின் மிக முக்கியான ஆன்மீக தலம் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோயில். பணக்கார கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். அப்படி உள்ளூர், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரினத்திலும், சிறப்பு கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வர். விடுமுறை தினங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பக்தர்கள் இங்கு வருகை புரிவர். அந்த வகையில் கடந்த 19-ம் தேதி மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 90,956பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் 33,046பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி இருப்பதாகவும் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05கோடி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினம் 4.44லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப் போல, அதேபோல், 2 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்து 708 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது 31…

Read More