Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!
Featured

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

Editor 4 webBy Editor 4 webJuly 29, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
5 4
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மதுரை மாவட்டத்தின் அடையாளம் என்றால் அது அழகர்கோயில் எனலாம். மீனாட்சி அம்மன் கோயில் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதே அளவு கள்ளழகர் கோயிலும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களும் மிகவும் பிரபலம். இக்கோயிலின் ஆடி பெருந்திருவிழா கடந்த 21-ம் தேதி காலை மங்கள இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் முதல் நாளில் இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது.

உற்சவர் கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை கண்காணிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று மாலை ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு அழகர்கோவில் 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சந்தனம் சாத்துப்படி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் திரண்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!
Next Article பௌர்ணமி நிலவொளியில் ஒளிர்ந்த திருச்செந்தூர் கடற்கரை..!! பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

75 ஆண்டுகள் பழமையான கோயிலில் குடமுழுக்கு..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

May 20, 2026

ஆடி முதல் வெள்ளி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி

July 17, 2026

இன்றைய (13.07.2026) ராசி பலன் – மேஷம்

July 13, 2026

இன்றைய (24.06.2026) ராசிபலன் – மேஷம்

June 24, 2026

இன்றைய (16.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 15, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.