Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா..! கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
Featured

நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா..! கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 9, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
3 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஒன்றாகும். பழைமையும் சிறப்பும் வாய்ந்த இத்திருக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில் அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாக்கள் முக்கியமானவை.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழாவிற்காக ஸ்ரீ காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த புதன்கிழமை மாலை தன் வீடான அம்பாள் சன்னதிக்கு ஏழுந்தருளினார். ஆடிப்பூர திருவிழா கொடிஏற்ற தினமான இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு கோ பூஜை மற்றும் கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.

கொடிமரம் முன்பாக அஸ்திரதேவி வைத்து நவகலசங்கள் வைத்து வழிபாடு நடைபெற்றது. கொடிப்பட்டம் திருக்கோயிலுக்குள் உலா வந்தது. அம்பாள் சன்னதி உற்சவர் மண்டபத்தில் ஸ்ரீ காந்திமதி அம்பாள் சிறப்பாக அலங்காிக்கப்பட்டு இருந்தார், காலை 07.30 மணிக்கு மேல் 08.30 க்குள் அம்பாள் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள் பால் தயிர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று புதுவஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது.

கொடிமரத்திற்கு சோடச தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் 10 நாட்களும் தினந்தோறும் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் 12ம் தேதி 4ம் திருநாள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நண்பகலிலும் , வரும் 18ம் தேதி 10ம் திருநாள் மாலை ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஸ்ரீகாந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைகொட்டு திருவிழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Article🙏 நினைத்தாலே அருள் தரும் கரூர் மாரியம்மன்.. கவலைகள் நீங்கி ஆனந்த வாழ்வு பெறும் ரகசியம்..!!
Next Article திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! இலவச தரிசன டோக்கன் ரத்து..!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்..!! என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா..??

June 15, 2026

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.