Author: Editor 4 web
வார விடுமுறை என்றாலே மக்கள் கோயில்களுக்கோ, சுற்றுலா தலங்களுக்கோ படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் வார இறுதி நாட்களை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், பிராந்தியத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகம் கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் நன்செய் இடையாறு காவேரி கரையில் உள்ள சுப்பிரமணியர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர் மற்றும் ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜாசுவாமி, பொத்தனூர் சக்தி…
கிருஷ்ணகிரி அருகே சுமார் 800 ஆண்டுகள் பிரச்சிப்பெற்ற ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைப்பெற்ற தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் சுமார் 8040 ஆண்டுகள் பிரச்சித்தி பெற்ற ஸ்ரீ காலபைரவா் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்த திருக்கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஸ்டமியை யொட்டி வெ பூசணிக்காயில் விளக்கு ஏற்றும் நிகழ்வு வெகு விமர்ச்சியாக நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீ காலப்பைரவா திருக்கோவில் இன்று தேய்பிறை அஸ்டமியையொட்டி சிறப்பு பூஜை வழிப்பாடுகள் நடத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி, கும்மனூர், தாசிரிப்பள்ளி, சோமார்பேட்டை, வெண்ணம்பள்ளி காத்தாடி குப்பம், சூரன் குட்டை, ஆலப்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலத்துக் கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேறிடும் வகையில் ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிக்கு வெண் பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிப்படனர். மேலும் இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி தவெக சட்ட மன்ற…
புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி பரிகார வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா சக்தி பரிகார வராகி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், குங்குமம், பன்னீர் மற்றும் கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பாராயணம் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு வராகி அம்மனை வழிபட்டு சென்றனர்.
கோவை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் மூலம் தங்களது தலையெழுத்து மாறும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன நேர்த்திக்கடன் வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பள்ளபாளையத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் துவக்கமாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனின் திருக்கல்யாண வைபவமும் விமரிசியாக நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு இன்று நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, பக்திப் பரவசத்தில் அருள் வந்து ஆடியவாறு வந்த கோவில் பூசாரி, பூஜை…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமகா காளியம்மன் கோயில். மிகவும் பழமை வாய்ந்த கோயிலான இங்கு ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டின் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை ஸ்ரீமகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் பால் காவடி, செடல் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நெற்றிரவு நடைபெற்றது. இதில் தேவங்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
