குப்பை கழிவுகளாக காட்சியளித்த சத்திரம் குளக் கரையை பலப்படுத்தி சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்தி இருக்கின்றனர் தண்டலம் ஊராட்சி கிராம மக்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அமைந்துள்ள சத்திரம் குளம். மிகவும் பழமை வாய்ந்த இக்குலத்தின் தண்ணீரை தண்டலம் மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக குளக்கரை சீரமைக்கப்படாமல் குளத்தின் கரைகள் மீது மது பிரியர்கள் மது அருந்தி செல்வதால் குளக்கரை சுற்றி குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து குளற்று நீர் துர்நாற்றம் வீசியது.
தண்டலம் கிராம மக்கள் வேண்டுதலுக்கு இணங்க ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஏற்பாட்டில் கிராம மக்கள் உதவியோடு குளக்கரை வலுப்படுத்தப்பட்டு, குளத்து நீரில் உள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்டது.
பின்னர் குளக்கரை மீது அமைந்துள்ள ஸ்ரீ கங்கையம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு கூழ் வாத்தல் திருவிழாவுடன் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தண்டலம் ஊராட்சி கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு கங்கை அம்மனை வழிபாடு செய்தனர்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கங்கை அம்மன், சத்தர குளத்தில் மூன்று சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் வெற்றிலையில் குளத்தில் கற்பூரம் ஏந்தி வழிபாடு செய்தனர். இறுதியில் கங்கை அம்மன் திரு வீதி உலா நடைபெற்றது.

