Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருப்பதி : வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்..! இன்றும், நாளையும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!
Featured

திருப்பதி : வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்..! இன்றும், நாளையும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!

Editor 4 webBy Editor 4 webJune 28, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
9
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மொஹரமை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், வரலாறு காணாத வகையில் திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வைகுந்தம் தங்கும் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் தரிசன வரிசையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பச்சி கல்வ கங்கம்மா கோவில் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் கட்டம், கட்டமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, பால் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் உடல்நிலை பாதிக்கபட்டால் சிகிச்சை அளிப்பதற்காக ஆங்காங்கே நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதாரண பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்காக இன்றும், நாளையும் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் பரிந்துரை கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைனில் வழங்கப்படும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வந்த 800 டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் 200 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 85,582 பேர் தரிசனம் செய்தனர். 44, 155 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.66 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

crowd elumalaiyan temple tripati
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleநெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Next Article வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்!. “கோவிந்தா கோவிந்தா” கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
Editor 4 web

Related Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கடகம்

Trending Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மீனம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – தனுசு

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மகரம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கும்பம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.