Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆனி பிரம்மோற்சவம்: 6ம் நாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்!
Featured

ஆனி பிரம்மோற்சவம்: 6ம் நாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்!

Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 14 10h09m37s167
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆனி பிரம்மோற்சவ விழாவின் 6வது நாள் உற்சவத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

உலகப் புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆனி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

vlcsnap 2026 07 14 10h10m07s706

அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா, கடந்த ஜூலை 8-ம் தேதி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்கக் கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில், தினந்தோறும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவது வழக்கமாகும்.

பிரம்மோற்சவத்தின் 6வது நாள், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்குத் திருவாபரணங்கள் மற்றும் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

vlcsnap 2026 07 14 10h10m12s921

மகா தீபாராதனை முடிந்தவுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் ஆகியோர் திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தனர். மாட வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, பக்திப் பெருக்குடன் சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: வயதான பக்தர்களுக்கான புதிய இலவச தரிசன வழிமுறை!
Next Article ஏழுமலையானை தரிசிக்க செல்கிறீர்களா? வயதானவர்கள் 30 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்யலாம்..! என்ன செய்ய வேண்டும்?
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.