Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!
Featured

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

editor5By editor5August 7, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
image 19
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தென் தமிழகத்தில் சக்தி வழிபாட்டுத் தலங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள இவ்வாலயம், வைப்பாறு மற்றும் அர்ச்சுனா ஆறு ஆகிய இரு புனித நதிகளுக்கு இடையே அமைந்துள்ள சிறப்புமிக்க திருத்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் வழிபாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுவதால், இந்த காலகட்டத்தில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும். திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

அக்னி சட்டி ஏந்துதல், பால்குடம் எடுத்தல், ஆயிரம் கண் பானை செலுத்துதல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்து வழிபடுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். விழா நாட்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா ஒரு வார காலம் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த ஆண்டுக்கான திருவிழா தொடக்கமாக நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் சிவாச்சாரியார்கள் கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருவிழா கொடியை ஏற்றினர். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, அப்பனேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற உள்ள விழா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aadi Festival irukkankudi mariamman temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா..! பால்குடம் சுமந்து மக்கள் நேர்த்திக்கடன்..!
Next Article தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
editor5

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா..! பால்குடம் சுமந்து மக்கள் நேர்த்திக்கடன்..!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.