பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு குரு பெயர்ச்சி என்பதால் அதன் பலன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வீனை ஆசிரியை ஹாஷாரவி என்பவர் அண்ணாமலையார் கோவிலில் வீனை இசை மீட்டு வழிபாடு செய்தார்.

குறிப்பாக நட்டாய், புகைவரணி, சண்முகபிரியா, ரேவதி உள்ளிட்ட ராகங்கள் வாசித்த பின்னர் விநாயகர், முருகர், சிவபெருமான் மற்றும் அம்மன் பாடல்களை வீணையில் வாசித்தார். கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரும் ஆர்வமுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version