திருவாடானை பிடாரி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவினையொட்டி சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி (பிடாரி அம்மன்) திருக்கோவில் சித்திரைத் திருவிழா மே 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவாடானை நான்கு ரத வீதிகள் வழியாக வான வேடிக்கைகளுடன் வீதி உலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இளைஞர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version