முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. பல நாட்களாக கோயில் கோபுரங்கள் உட்பட கட்டமைப்புகள் புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கை முன்னிட்டு ஜூன் 30ம் தேதியன்று மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் இணைந்து இந்த குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
அதிகாலையில் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். சுவாமி தரிசனம் செய்தபிறகு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், ”பழமுதிர்ச்சோலை குடமுழுக்கு நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் கூறினார்.
அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் அரோகரா என முழக்கமிட்டு, குடமுழுக்கில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
