இந்தியாவில் உள்ள தொன்மியான வைணவ கோயிலில் ஒன்று, மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் இக்கோயில் தட்சிண துவாரகை என்றும் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு :

துவாபர யுகத்தில் கண்ணனின் அவதாரக் காட்சியைத் தரிசிக்க கோபிலா மற்றும் கோப்ரளய முனிவர்கள் துவாரகைக்குச் சென்றனர். ஆனால், பகவான் பூவுலகை நீத்ததை அறிந்து வருந்தினர். நாரதரின் அறிவுரைப்படி, அவர்கள் மன்னார்குடிக்கு வந்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் தவத்திற்கு மகிழ்ந்த கண்ணன், முப்பத்தி இரண்டு வகையான திருக்கோலங்களில் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

இராஜமன்னார்குடியில் எழிலோடு கம்பீரமாக அமைந்திருக்கும் இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1072-கி.பி. 1122 கட்டப்பட்டது. பின்னர் வந்த நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயகக்கர், விஜயராகவ நாயக்கர், செண்பகமன்னர் நாயக்கர் போன்றோர்களால் பிரகாரங்கள் கோபுரங்கன் மதில்கள் போன்றவை கட்டப்பெற்று ஏக்கர் பரப்பளவில் மூன்று உயர்ந்து அமைக்கப்பட்டது. ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும்.

கோயில் சிறப்பு :

இக்கோயிலில் கருடாழ்வார் பெண் வடிவில் அருள்பாலிப்பது பெரும் சிறப்பு. இவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

விழாக்கள் :

இக்கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பங்குனி மாதம் நடைபெறும் 18 நாட்கள் பிரும்மோற்சவம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த பெரிய உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

கோயில் அமைப்பு :

இக்கோயில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள், 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்டது. இக்கோயிலின் அருகில் கிருஷ்ண தீர்த்த குளமும் ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள கெருட ஸ்தமபம் மற்றும் ராஜகோபுரம் மன்னார்குடின் அடையாளமாக மன்னார்குடி நகராட்சியின் சின்னமாகவும் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version