உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் இத்தலம் தசரா திருவிழாவிற்கு மிகவும் பெயர்பெற்றது.

இன்றைய தினத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் முத்தாரம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டன.

ஆடி செவ்வாய்க்கிழியையொட்டி கோவிலுக்கு வந்திருந்த திரளான பெண் பக்தர்கள், வளாகத்தில் நெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனின் தரிசனத்தை பெற்றனர்.

இதனிடையே, உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா நெருங்கி வருவதால், இந்த ஆண்டு விரதத்தைத் தொடங்கவுள்ள பக்தர்கள் பலர் தங்களது மாலை அணிந்து தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version