ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில், அணையின் அடிவாரம் மட்டம் பகுதியில் மக்கள் காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து மூழ்கி புனித நீராடினர்.
மேலும் பொதுமக்கள் குல தெய்வ சாமி சிலைகளையும், பூஜை பொருட்களையும் காவிரி கரையில் வைத்து சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்னர்.
ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் அங்கு கூடியதால், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் காவிரி ஆற்றில் உள்ளனர்.
காவிரி ஆற்றில் நீராட வரும் பெண்களுக்கு உடை மாற்றும் அறை உள்ளிட்டா பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மேட்டூர் அணையில் தண்ணீர் இன்றி பாறைகளாக காட்சி அளித்ததால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
