ஆம்பூர் பச்சக்குப்பம் மயிலாடும் மலை முருகர் கோவில் ஆடிக்கிருத்திகை விழாதிரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மயிலாடும் மலை முருகர் கோயில். பொதுவாக கிருத்திகை மாதங்களில் முருகருக்கு சிரப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மயிலாடும் மலை முருகர் கோயிலில் ஆடி கிருத்திகை ஒட்டி சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன. இதில் முருகன் திருக்கோயிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வேண்டி ’அரோகரா அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version