வேலூர் கோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் ‘புஷ்பபாவாடை’ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அகிலாண்டீஸ்வரியையும், மூலவர் ஜலகண்டீஸ்வரரையும் தரிசித்து அருள் பெற்றனர்.

இதேபோல், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ விஷ்ணு துர்கை அம்மன் கோயிலிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடத்தப்பட்டன. இங்கு துர்கை அம்மனுக்குச் சிறப்புமிக்க ‘வெண்ணெய் காப்பு’ அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இக்கோயிலிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version