கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிடிவாத குணத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில்கள் லாபத்தைத் தரும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரக்கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத்துணையுடன் மனவிட்டுப் பேசுவதன் மூலம் குடும்ப ஒற்றுமை பலப்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version