திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். வீண் அலைச்சல்கள், செலவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை அறவே தவிர்க்கவும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் தாமதமாகவே கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொள்வது அவசியம். உறவினர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற சிறு தொல்லைகள் வந்து போகலாம்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Share.
Leave A Reply

Exit mobile version