பொருளாதார ரீதியாகச் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். சொல்வாக்கும், செல்வாக்கும் கூடும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கு உகந்த நாள். நிலுவையில் இருந்த வரவுகள் வசூலாகும்.  குடும்பத்தில் சுப காரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு கூடும். தொண்டை அல்லது கண் சார்ந்த சிறு உபாதைகள் தோன்றி மறையலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்பச்சை

Share.
Leave A Reply

Exit mobile version