சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில், வரும் 18ஆம் தேதி ஸ்ரீ விஜயேந்திர சுவாமி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஸ்ரீவிஜயகணபதி என மகா பெரியவர் பெயரிட்ட இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் விநாயகர், காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அருளுவதோடு கவலைகளை நீக்கு சுபிட்சம் தருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.
இந்த ஆலயத்துக்கு வந்து விஜயகணபதியைத் தரிசனம் செய்து அவருக்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபட்டுச் சென்றால் கூடிய விரைவில் நல்லது நடைபெறும் என்பதும் பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்த ஆலயத்தில் மூலவராக விநாயகர் எழுந்தருளியிருக்க ஸ்ரீவிஜயகுமாரசுவாமி, ஸ்ரீ விஜயராகவர், ஸ்ரீ விஜய மணிகண்டர், ஸ்ரீவிஜயதுர்கா, ஸ்ரீவிஜயமாருதி மற்றும் நவகிரகங்கள் ஆகியோரும் சந்நிதிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ரனர்.
கடந்த 22.6.1994-ம் முதல் இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடைபெறும் மகாகணபதி ஹோமம் பக்தர்கள் கலந்து கொண்டு கணபதி அருள் பெறுகிறார்கள்.
இப்படிப்பட்ட பெருமையும் மகிமையும் வாய்ந்த விஜய கணபதி ஆலயத்தில் வரும் 18 ம் தேதி காலை 10.30 முதல் 11.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த கும்பாபிஷேகத்தை நடத்திவைக்க இருக்கிறார். இதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
