வைகாசி மாதம் பிறப்பை ஒட்டி, முருகன் மற்றும் சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்த வகையில்,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயிலில் கோ பூஜை நடைபெற்றது. மாசிலாமணி நிலையத்தில் நடந்த கோ பூஜையில் தருமபுரம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு படுமாட்டிற்கு பழங்கங்கள், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்து வலம் வந்தனர்.

இதேப்போல் பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் அமைந்துள்ள காட்சி கொடுத்த விநாயகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேவாரத் திருப்பதிகங்கள் பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேப் போல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விசாக பெருந்திருவிழா இந்தாண்டும் விமர்சையாக தொடங்கியது. இவ்விழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Share.
Leave A Reply

Exit mobile version