புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அருள்தரும் சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆலயத்தில் இன்று  ( மே 11 ) திங்கட்கிழமை அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167வது பிறந்தநாள் குரு பூசை விழா கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் ஐங்கரன் வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு தெந்தமிழில் வேள்வி, 8.30 மணிக்கு நிறைவேள்வி, 9 மணிக்கு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 10.30 மணிக்கு மலர் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பேரொளி வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் என் ஆர் காங்கிரஸ் லாஸ்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி சிவக்கொழுந்து, இந்திரா நகர் தொகுதி எம்எல்ஏ ஏ கே டி ஆறுமுகம் மற்றும் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version