திருச்சி அருகே உள்ள ஸ்ரீ அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி பூஜை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறி கள்ளர்தெருவில் திருச்சி சாலை அருகில் ஸ்ரீ அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு பல்வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் மாரியம்மனுக்கு வராகி அலங்காரம் செய்யப்பட்டது பொதுமக்கள் வாழை இலையில் பச்சரிசி பரப்பி தேங்காயை உடைத்து வைத்து அதில் விளக்கேற்றி பாடல்கள் பாடி வராகியை வழிபாடு செய்தனர் பின்னர் விநாயகர் கருப்பண்ணசாமி வராகி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
