Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. கும்பகோணத்தில் கோலாகலம்
ராசிபலன்

ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. கும்பகோணத்தில் கோலாகலம்

Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025Updated:December 2, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
kumb
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கும்பகோணம் ஆதி​கும்​பேஸ்​வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​று, ‘கும்​பேஸ்​வரா கும்​பேஸ்​வ​ரா’ என முழக்​கமிட்​டனர்.

கும்பகோணம் மகாமகம் தொடர்​புடைய 12 சைவ கோயில்​களில் முதன்​மை​யானது மங்​களாம்​பிகா உடனாய ஆதி​கும்​பேஸ்​வரர் கோயில். இக்​கோயி​லில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்​யப்​பட்​டு, 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக திருப்​பணி​கள் நடை​பெற்று வந்​தன.

பணிகள் நிறைவடைந்​ததை தொடர்ந்​து, கடந்த நவ.27-ம் தேதி யாக​சாலை பூஜைகளு​டன் கும்​பாபிஷேக விழா தொடங்​கியது. இந்​நிலை​யில், 8 கால யாக​சாலை பூஜைகளுக்​குப் பின், நேற்று அதி​காலை 5 மணிக்கு பரி​வார பூர்​ணாஹூ​தி​யுடன் கடம் புறப்​பா​டாகி, சிவச்​சா​ரி​யார்​கள் வேதமந்​திரங்​கள் முழங்க, சிவவாத்​தி​யங்​கள் இசைக்க, காலை 6.38 மணிக்கு மூல​வர், ராஜகோபுரம் உள்​ளிட்ட அனைத்து கோபுர கலசங்​களுக்​கும் புனிதநீர் ஊற்​றப்​பட்டு கும்பாபிஷேகம் விமரிசை​யாக நடை​பெற்​றது.

அப்​போது, ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘கும்​பேஸ்​வ​ரா… கும்​பேஸ்​வ​ரா’ என விண்​ண​திர முழக்​கமிட்​டனர். பின்​னர் கலசங்​களுக்கு மகா தீபம் காட்​டப்​பட்​டது.

விழா​வில், காஞ்சி காமகோடி சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், அமைச்​சர்​கள் சேகர்​பாபு, கோவி.செழியன், மந்த்​ராலய மடா​திபதி சுபுதேந்​திர தீர்த்த சுவாமிகள், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், எம்​எல்ஏ சாக்​கோட்டை அன்​பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், அறங்​காவலர் குழு தலை​வர் பாலசுப்​பிரமணி​யன், அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் சிவக்​கு​மார், துணை ஆணை​யர் உமாதேவி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்​தி​கள் ரிஷப வாக​னத்​தில் வீதி​யுலா நடை​பெற்​றது. தஞ்​சாவூர் எஸ்​.பி ராஜா​ராம் தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் மற்​றும் ஊர்க்​காவல் படை​யினர் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

31 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: விழா​வில் பங்​கேற்ற அமைச்​சர் சேகர்​பாபு, செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தமிழகம் முழு​வதும் 31 கோயில்​களில் கும்பாபிஷேகம் நடந்துள்​ளது. திமுக ஆட்சியில் இது​வரை 3,896 கும்பாபிஷேகம் நடை​பெற்​றுள்ள நிலை​யில் ஜனவரிக்​குள் 4 ஆயிரத்தை கடக்​கும்.

மேலும், 1,059 கோயில்​களுக்கு சொந்​த​மான ரூ.8,119 கோடி மதிப்​புள்ள 8,022.48 ஏக்​கர் நிலங்​கள் ஆக்​கிரமிப்​பில் இருந்து மீட்​கப்​பட்​டுள்​ளன. சுவாமி மலை கோயி​லில் அமைக்​கப்​பட்டு வரும் மின்​தூக்கி பொங்​கல் பண்​டிகைக்​குள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​படும்” என்​றார்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 02.12.2025 | கார்த்திகை 16 – விசுவாவசு
Next Article கார்த்திகை தீபம்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Trending Posts

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

July 24, 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.