Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»கார்த்திகை தீபம்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
ராசிபலன்

கார்த்திகை தீபம்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
krt 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கார்த்திகை தினத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றலாம்.

தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் மிகவும் சிறந்தது. கடைகளில் கிடைக்கும் செயற்கையான விளக்குகளை விடுத்து, மண் விளக்குகளை வாங்கி அதை சுத்தம் செய்ய வேண்டும். முதல் நாளே விளக்குகளை வாங்கி வந்து அதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சுத்தப்படுத்தி காயவிட வேண்டும்.

பின்னர் அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் தீபமிட்டு வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றலாம். சமையலறை, படுக்கையறை, மொட்டை மாடி, நிலை வாசல் என்று அனைத்து இடங்களிலும் தீபம் வைக்க வேண்டும்.

தீபத்திருநாளன்று இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களால் எத்தனை தீபம் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்கள் ஏற்றலாம். பூஜை அறை, வாசல், கொல்லைப்புறம், துளசி மாடம், ஜன்னல்கள் என அனைத்து இடங்களிலும் 5,7,9,11 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றலாம்.

வாசலின் இருபுறமும் தலா ஒன்று, வீட்டின் நடுப்பகுதியில் ஒன்று, துளசி மாடத்தில் ஒன்று, பூஜை அறையில் மூன்று அல்லது ஐந்து தீபங்கள் ஏற்றுவது சிறப்பு. அனைத்து தீபத்திற்கும் நெய் இட முடியாதவர்கள் ஒன்று அல்லது இரண்டு தீபங்களுக்கு மட்டும் நெய்யை பயன்படுத்தலாம். விளக்கிற்கு அடியில் வாழை இலை, பூவரச இலை அல்லது தட்டு போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.

கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்பதால் அறுகோண தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படும் காட்சியை பார்த்து முடித்த பின்னர் வீட்டு வாசலில் நட்சத்திரம் வரைந்து அதன் ஆறு முனைகளிலும் அறுகோண தீபம் ஏற்றி ‘சரவணபவ’ என்று எழுதி வழிபடலாம். அறுகோண தீபம் ஏற்றி வழிபடுவது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், திருமணமாகாதவர்களுக்கு திருமண வரத்தையும் நல்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டில் பூஜைகளை முடித்த பின்னர் கோயில்களில் நடக்கும் திருக்கார்த்திகை சிறப்பு பூஜைகளிலும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளலாம். சொக்கப்பனை நிகழ்வு என்பது இறைவன் மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் நாய், பூனை போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் மோட்ச பாதை கிடைக்க வேண்டும் என்று இறைவன் காட்டும் ஒளிப் பாதையை குறிக்கும் நிகழ்வாகும். இந்த புனித நாளில் முறையாக விரதம் இருந்து தீபமேற்றி வழிபட்டு இறைவன் அருளை முழுமையாகப் பெறுங்கள்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. கும்பகோணத்தில் கோலாகலம்
Next Article மணமகள் ஏன் மணமகனின் வலது பக்கம் அமர்ந்திருக்கிறார் தெரியுமா?
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Trending Posts

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

July 24, 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.