Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆலயம் அறிவோம்»உத்தரகோசமங்கை – சிவபெருமான் வேதம் சொன்ன ஆதித் தலம்!
ஆலயம் அறிவோம்

உத்தரகோசமங்கை – சிவபெருமான் வேதம் சொன்ன ஆதித் தலம்!

Editor web1By Editor web1April 28, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
WhatsApp Image 2026 04 28 at 11.12.39 AM
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”…

“மண்ணுலகின் கைலாயம்” என்றும், “ஆதி சிதம்பரம்” என்றும் போற்றப்படும் திருக்கோயில் உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோயில்.

சிதம்பரத்தைப் பற்றி நாம் அறிவோம், ஆனால் அந்தச் சிதம்பரத்திற்கே முந்திய ஒரு தலம் உண்டு என்றால் அதுதான் உத்தரகோசமங்கை. “மண் முந்துதோ, மங்கை முந்துதோ?” என்பது உத்தரகோசமங்கைப் மக்களின் வாழ்நாள் பழமொழி. அதாவது, இந்த மண் உருவாவதற்கு முன்பே உருவானது இந்த மங்கைத் தலம் என்பது இதன் தொன்மைக்குச் சான்று.

இந்த ஊரின் பெயரிலேயே ஒரு பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது.

உத்தர என்றால் – பதில் அல்லது உபதேசம். கோசம் என்றால் – ரகசியம் (வேத ரகசியங்கள்). மங்கை என்றால் – பார்வதி தேவி. பார்வதி தேவிக்கு, சிவபெருமான் வேதங்களின் நுட்பமான ரகசியங்களை உபதேசித்தத் தலம் என்பதால் இது ‘உத்தர-கோச-மங்கை’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தலத்தின் வரலாறு திரேதா யுகத்தோடு தொடர்புடையது. இலங்கையை ஆண்ட ராவணனின் மனைவி மண்டோதரி, ஒரு சிறந்த சிவபக்தை. அவர் “இறைவனே நேரில் வந்து எனக்குக் காட்சி தர வேண்டும்” என இத்தலத்தில் தவம் இருந்தார்.

அவருடைய பக்திக்காக சிவபெருமான் ஒரு குழந்தையாக அவர் மடியில் வந்து அமர்ந்தார். இதைக் கண்ட ராவணன், அக்குழந்தையைச் சிவபெருமான் என அறியாமல் தொடுவதற்கு முயல்கிறார். அப்போது இறைவன் ஒரு அக்னி பிழம்பாக மாற, அந்த அக்னியில் இத்தலத்தின் தீர்த்தமான ‘அக்னி தீர்த்தம்’ உருவானது என்பது வரலாறு.

இந்தக் கோயிலின் மிகப்பெரிய அதிசயம் அங்குள்ள மரகத நடராஜர் திருமேனி. ஆறடி உயரமுள்ள இந்தச் சிலை, முழுமையாக ஒரே ஒரு பச்சை மரகதக் கல்லால் ஆனது. மரகதம் என்பது மிகவும் மென்மையானது. ஒலியின் அதிர்வைக் கூடத் தாங்க முடியாதது. எனவே, சிலையைப் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டே இருக்கும்.

ஆண்டுக்கு ஒருமுறை, ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் அந்தச் சந்தனம் களையப்படும். அன்று அந்தப் பச்சை மரகத மேனியைக் காணக் கண் கோடி வேண்டும்!. அந்த ஒரு நாளைத் தவிர மற்ற 364 நாட்களும் சந்தனக் காப்பிலேயே இறைவன் அருள் பாலிக்கிறார்.

சிவபெருமான் மேல் மாறாத பக்தி கொண்ட மாணிக்கவாசகர், இத்தலத்தில் தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். அவர் பாடிய திருவாசகத்தில் “உத்தரகோசமங்கைக்கு அரசே!” என்று உருகிப் பாடியுள்ளார்.

பொதுவாகச் சிவபெருமானுக்குத் தாழம்பூ சூட்டமாட்டார்கள். ஏனென்றால் பிரம்மனுக்கு சாட்சியாக தாழம்பூ பொய் சொன்னதால், பூஜைக்கு பயன்படாமல் போவால் என தாழம்பூவுக்கு சிவபெருமான் சாபம் தந்ததாக வரலாறு. ஆனால், சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால், இங்கு மட்டும் சிவனுக்குத் தாழம்பூ சூட்டப்படுவது ஒரு விசேஷம்.

இக்கோயிலின் தல விருட்சமான இலந்தை மரம் மிக மிகத் தொன்மையானது. இன்றும் அது கனி தந்து கொண்டிருப்பது இயற்கையின் அதிசயம்.

கைலாயத்திற்குச் செல்ல முடியாதவர்கள், உத்தரகோசமங்கைக்குச் சென்றால் அந்தப் பலனை அடையலாம் என்பது ஐதீகம். கல்லும் மண்ணும் கூடச் சிவமயமாகத் திகழும் இந்தத் தலம், தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், ஆன்மீகத் தேடலுக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்.

“ஆடும் கூத்தன் ஆதி சிதம்பரம்” எனப் போற்றப்படும் இந்த மண்ணிற்கு ஒருமுறை சென்று அந்த மரகத மேனியனை வணங்குவது நம் வாழ்வின் பெரும் பேறு.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவாராரு.. வாராரு.. அழகரு வாராரு…
Next Article இன்றைய (29.04.2026) ராசி பலன் – மேஷம்
Editor web1
  • Website

Related Posts

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்.. கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!

August 6, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.