Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்..! சேஷ வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்..!
Featured

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்..! சேஷ வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்..!

Editor web1By Editor web1May 10, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருச்சியில் உள்ள உலக பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ரங்கநாதர் கோயிலில், சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி, ஒவ்வொரு நாளும், காலை, மாலை என இருவேளையில், பல்வேறு வாகங்களில் எழுந்தருளும் நம்பெருமாள், எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில் 4-ம் நாளான நேற்று காலை இரட்டை பிரபை வாகன சேவை நடைபெற்றது. மாலையில் கருட வாகன சேவை நடைபெற்றது. வீதியில் உலாவந்த பெருமாளை பக்தர்கள் வழிநெடுங்கிலும் நின்று தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 5-ம் நாளான இன்று காலையில் சேஷ வாகன சேவை நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாள் இன்று அதிகாலை கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு மண்டபத்தை வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து சேஷ வாகனத்தில் எழுந்திருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன் பின் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு அனுமந்த வாகனத்தில் புறப்படும் ஸ்ரீநம்பெருமாள், சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இரவில் வாகன மண்டபத்திற்கு சென்று, பின் கண்ணாடி அறையை சென்றடைகிறார். வாகன சேவையை முன்னிட்டு விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபிரமாண்டமாக நடைபெற்ற திருவாரூர் தெப்பத் திருவிழா – பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Next Article கன்னியாகுமர் : பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை..! திரளான பெண்கள் பங்கேற்பு..!
Editor web1
  • Website

Related Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

June 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – கும்பம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 19, 2026

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.