Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»வினைகள் தீர்க்கும் வேலக்கோட்டம் !
Featured

வினைகள் தீர்க்கும் வேலக்கோட்டம் !

Editor web1By Editor web1May 12, 2026Updated:May 12, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
maruthamalai temple a
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆறுமுகனின்  பன்னிரு கரங்களில் எத்தனையோ ஆயுதங்கள்  திகழ்ந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேலாயுதம் மட்டுமே. தனியே  துதித்து வழிபடப்படும் சிறப்பும் மேன்மையும் வேலாயுதத்துக்கு உண்டு.

வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என்றெல்லாம் பற்பல திருப்பெயர்களுடன் சிறப்பிக்கப்படும் வேலாயுதத்தைப் பூஜித்து வழிபட்டால், தீவினைகள் யாவும் தீரும்; சத்ரு பயம் நீங்கும், சகல செளபாக்கியமும் கைகூடும் என்கின்றன ஞானநூல்கள்.

இவ்வளவு சிறப்பு கொண்ட வேலுக்கென்று தனிக்கோயில், முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் மருதமலையின் அடிவாரத்தில் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கே, கருவறையில் சுமார் ஆறேமுக்கால் அடி உயரத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வேலாயுதம் சிற்பச் சிறப்புடன் திகழ்கிறது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூதச் சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வேலின் முகப்பு பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதம் சிறிய துவாரத்துடன் கருவறை விதானத்தை அமைத்துள்ளனர்.

கோயிலின் முன்மண்டபமானது முருகப் பெருமானின் ‘சரவண பவ’ எனும் ஆறெழுத்தைக் குறிக்கும் வகையில், அறுகோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வேலக்கோட்டம் எனப்படும் இங்கு அமர்ந்து முருகனையும், அவன் கையில் திகழும் வேலாயுதத்தையும் மனத்தில் ஏற்றி

தியானித்தால், நம் சிந்தனை வளம் பெறும்; எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே ஸித்திக்கும். மருதமலைக்குச் செல்லும் அன்பர்கள் மறவாமல் இந்த வேலக் கோட்டத்துக்கும் சென்று வழிபட்டு வாருங்கள்.

ஒரே இடத்தில் அறுபடை வீடு தரிசனம்!

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?!

சென்னைபெசன்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோயிலில் இத்தகைய அரிய வாய்ப்பு பக்தர்களுக்குக் கிடைக்கும். அதே போல், கோவை அருகே அமைந்திருக்கும் குமரன்கோட்டம் எனும் ஊரில் உள்ள, அருள்மிகு சுவாமிநாத ஸ்வாமி திருக்கோயிலிலும், அறுபடை வீடு ஸ்வாமிகளை தனித்தனிச் சந்நிதிகளில் தரிசிக்கலாம். கோவைசிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது குமரன்கோட்டம்.

அறுபடைவீடுகள் ஒவ்வொன்றிலும் முருகன் எந்தப் பெயரில், எந்த திசைநோக்கி அருள்பாலிக்கிறாரோ அப்படியே இந்த ஆலயத்திலும் அந்தந்த சந்நிதிகள் அமைந்திருப்பது சிறப்பு. மேலும், ஒரே கல்லிலான நவகிரகம் இக்கோயிலின் கூடுதல் சிறப்பம்சம். இங்கு வந்து தரிசித்தால் அறுபடை வீடுகளுக்கும் சென்றுவந்த பெரும்புண்ணியம் கிடைக்கும் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகடக லக்னம்: கோடீஸ்வர யோகம் தரும் அதிர்ஷ்ட லக்னம்!
Next Article வராஹ வடிவில் அருளிய முருகன்… திருமணத் தடைகள் நீக்கும் பாலசுப்ரமணியர்
Editor web1
  • Website

Related Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Trending Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.