Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»வராஹ வடிவில் அருளிய முருகன்… திருமணத் தடைகள் நீக்கும் பாலசுப்ரமணியர்
Featured

வராஹ வடிவில் அருளிய முருகன்… திருமணத் தடைகள் நீக்கும் பாலசுப்ரமணியர்

Editor web1By Editor web1May 12, 2026Updated:May 12, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Theni Periya temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயிலின் தலபுராணம் பக்தர்களை பரவசப்படுத்துகிறது.பெரியகுளம் அருகே வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில், பக்தர்களின் துயரங்களைத் தேடி வந்து தீர்க்கும் அருள்தலமாக போற்றப்படுகிறது.

சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழன் இந்தப் பகுதியைச் சுற்றிப்பார்த்தபோது, அகமலை வனப்பகுதியில் மனதை உருக்கும் ஒரு காட்சியை கண்டார். குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த தாய்ப் பன்றி தவறி ஆழமான பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது. பசியால் அலறும் குட்டிகளின் வேதனையைப் பொறுக்க முடியாமல் முருகப்பெருமான் தாய்ப்பன்றியின் வடிவில் வந்து அவற்றுக்கு பாலூட்டி காத்தார்.

இந்த தெய்வீகக் காட்சியைத் தரிசித்த ராஜேந்திர சோழன், முருகனுக்கும் சிவபெருமானுக்கும் இத்தலத்தில் ஆலயம் எழுப்பினார். அதனால் இங்குள்ள சிவன் “ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர்” என்றும், அம்பாள் “ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி” என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் பக்தர்கள் இந்தத் தலத்தை பெரும்பாலும் பாலசுப்ரமணியர் கோயில் என்றே அழைக்கின்றனர்.

காசிக்கு நிகரான வராஹ நதி

மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ, வராஹ நதிக்கரையில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது இந்த ஆலயம். நதியின் இரு கரைகளிலும் ஆண் மருதமும் பெண் மருதமும் வளர்ந்திருப்பது இத்தலத்தின் அரிய சிறப்பு. இந்த அமைப்பு காசியைத் தவிர இங்கு மட்டுமே உள்ளது என்று கூறப்படுகிறது. அதனால் வராஹ நதி கங்கைக்கு நிகரானதாகவும், இந்தத் தலம் காசிக்கு ஒப்பானதாகவும் போற்றப்படுகிறது.தேனி மாவட்டத்தில் பழமையான பெருமைக்குரிய ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதால், பக்தர்கள் இதனை அன்புடன் “பெரிய கோயில்” என்றும் அழைக்கின்றனர்.

மூன்று கொடிமரங்களின் அதிசயம்

பிரம்மஹத்தி தோஷத்தால் அவதிப்பட்ட ஒரு அந்தணரிடம், ஒரு சித்தர், “நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் இருக்கும் ஆலயத்தில் மூன்று முறை நீராடி முருகனை வழிபடு; தோஷம் நீங்கும்” என்று அறிவுரை கூறினார்.அந்தணர் இந்தத் தலத்துக்கு வந்து வராஹ நதியில் இருமுறை மூழ்கி எழுந்தபோது, கரையில் இருந்த ஆலயம் மறைந்து வயல்வெளி மட்டுமே தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவரிடம் ஜெயதேவ மகரிஷி, “மூன்றாவது முறையும் மூழ்கி எழு; முருகன் தன் அருளைக் காட்டுவான்” என்றார்.மூன்றாவது முறை நீராடி எழுந்தவுடன் ஆலயம் மீண்டும் தென்பட்டது. முருகனை தரிசித்து வழிபட்ட அந்தணரின் தோஷம் முற்றிலும் நீங்கியது.

திருமணத் தடைகள் நீக்கும் வைகாசி விசாகம்

இந்த ஆலயத்தில் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமணத் தடைகளால் கவலைப்படும் பக்தர்கள், இந்த நாளில் முருகனை வழிபட்டு, அவருக்குச் சூட்டப்பட்ட மாலையை பிரசாதமாக பெற்றுச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.வராஹ நதிக்கரையில் உள்ள ஆண்–பெண் மருதமரங்களைத் தரிசிக்கும் தம்பதிகளுக்கு நீண்ட ஆயுள், மனஒற்றுமை, பிரிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையின் சிறப்பு

மனக்கஷ்டம், குடும்பத் துன்பம் அல்லது வாழ்க்கைத் தடைகளால் அவதிப்படுவோர் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், அவர்களின் துயரங்கள் சூரியனைக் கண்ட பனி போல விலகும் என பக்தர்கள் அனுபவத்துடன் கூறுகின்றனர்.

தரிசிக்க வேண்டிய தலம்

தேனியிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள பெரியகுளத்திலிருந்து, இந்தத் திருத்தலத்தை எளிதாகச் சென்றடையலாம்.

தாய்ப்பன்றியாக வந்து குட்டிகளைக் காத்த கருணைமிகு பாலசுப்ரமணியரை ஒருமுறை தரிசித்தாலே வாழ்க்கையின் துன்பங்கள் நீங்கி, திருமணத் தடைகள் விலகி, குடும்பத்தில் அமைதி மற்றும் வளம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவினைகள் தீர்க்கும் வேலக்கோட்டம் !
Next Article குழந்தைகளைச் சுமந்து தீமிதித்த பக்தர்கள்… மகா மாரியம்மன் திருவிழா கோலாகலம்!
Editor web1
  • Website

Related Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

June 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – கும்பம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 19, 2026

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.