Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தொடங்கியது வைகாசி விசாகத் திருவிழா – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்
Featured

தொடங்கியது வைகாசி விசாகத் திருவிழா – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்

Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
017 koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் வைத்தியநாத ஸ்வாமியாக எழுந்தருளி 24 திருவிளையாடல் புரிந்த ஸ்தலமாக உள்ள இக்கோவிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசியாக தொடர்ந்து வரும் நடைபெறுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் இந்த வருடத்திற்கான வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.11 நாள் நடைபெறும் இத்திருவிழாவில் தினம் தோறும் சுவாமி மற்றும் அம்பாள் வெட்டிவேர்சப்புறம், கல்பாக்க விருட்சம், அம்சவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வரும் 27ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி ரத உற்சவம் எனப்படும் தேர் திருவிழாவும் நடைபெறும். முன்னதாக இன்று காலை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்துள்ளனர் தொடர்ந்து குடிமகனத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு நந்தி பொறித்த கொடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து மா பொடி,மஞ்சள் பொடி, திரவிய பொடி,பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் கொடிமரத்திற்கு நடைபெற்றன. அதனை தொடர்ந்து தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றது இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகன்னியாகுமரி : பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா..! வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுப்பு..!
Next Article திருநள்ளாறில் அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா – பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Editor TN Talks

Related Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

June 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – கும்பம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 19, 2026

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.