கிருஷ்ணகிரி அருகே சுமார் 800 ஆண்டுகள் பிரச்சிப்பெற்ற ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைப்பெற்ற தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் சுமார் 8040 ஆண்டுகள் பிரச்சித்தி பெற்ற ஸ்ரீ காலபைரவா் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்த திருக்கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஸ்டமியை யொட்டி வெ பூசணிக்காயில் விளக்கு ஏற்றும் நிகழ்வு வெகு விமர்ச்சியாக நடைப்பெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஸ்ரீ காலப்பைரவா திருக்கோவில் இன்று தேய்பிறை அஸ்டமியையொட்டி சிறப்பு பூஜை வழிப்பாடுகள் நடத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி, கும்மனூர், தாசிரிப்பள்ளி, சோமார்பேட்டை, வெண்ணம்பள்ளி காத்தாடி குப்பம், சூரன் குட்டை, ஆலப்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலத்துக் கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேறிடும் வகையில் ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிக்கு வெண் பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிப்படனர்.
மேலும் இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி தவெக சட்ட மன்ற உறுப்பினர் முகுந்த் பாண்டியன் கலந்துக் கொண்டு ஸ்ரீ காலப் பைரவர் சுவாமியை தரிசனம் பெய்து வழிப்பட்டார். இதன் முன்னதாக ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலுக்கு வருகை தந்த தவெக சட்ட மன்ற உறுப்பினர் முகுந்த் பாண்டியனுக்கு ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவின் அறக்கட்டளையின் தலைவர் வேலாயுதம், கெளரவ தலைவரும் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் துணைத் தலைவருமான பி.சி.சேகர், செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் தேய்பிறை அஸ்டமியை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் தங்க கவசத்தில் காட்சியளித்த ஸ்ரீ காலப்பைரவர் சுமியை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர்.

