Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தங்க கோபுரம் கொண்ட விநாயகர் கோயில்..! பிரான்ஸ் தூதர்கள் இடிக்க முயன்ற கதை தெரியுமா?
Featured

தங்க கோபுரம் கொண்ட விநாயகர் கோயில்..! பிரான்ஸ் தூதர்கள் இடிக்க முயன்ற கதை தெரியுமா?

Editor 4 webBy Editor 4 webJune 18, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
6
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கடவுள்களில் முதன்மையான கடவுள் என்றால் அது விநாயகர் தான். மக்கள் எந்த நல்ல காரியம் செய்தாலும் முதலில் விநாயகரை வைத்தே தொடங்குவர். இவ்வளவு ஏன் நோட்டு புத்தகங்களில் எழுதத் தொடங்குவதற்கு முன்பு கூட பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவர்.

எப்படியான கோயில்களிலும் முதன்மையாக இருப்பவர் விநாயகரே. அவருக்கான தனி இருப்பிடம் இருந்தே தீரும். அப்படி இருக்க, விநாயகருக்கென்றே சிறப்பு கோயில்களும் இங்கு நிறைய உண்டு. அப்படி போற்றப்படும் கோயில்களில் ஒன்று புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில்.

நாட்டிலேயே கோபுரம் முழுவதும் தங்கத்ஹால் வேயப்பட்ட கோயில் மணக்குள விநாயகர் கோயில் மட்டுமே. பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கி.பி.1688-ல் பிரெஞ்சுக்காரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே அனைவரும் அறிந்த புதுவை மணக்குள விநாயகர் திருக்கோயில்.

இத்திருத்தலத்தின் மேற்குப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும், அது கடற்கரைக்கு அருகே இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும், ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மணற்குளத்தின் கீழ்க்கரையில்தான் விநாயகர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் என்ற பெயர் பிரபலமாயிற்று. புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் இருப்பதால் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயில் இக்கோயில். புதுச்சேரி மக்கள் இந்த விநாயகரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றுதான் அழைக்கின்றனர்.

இந்தக் கோயிலை இடிப்பதற்கு பலமுறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்த கோவிலை காப்பாற்றி வந்துள்ளனர். 8 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது.

இது இந்தக் கோயிலின் சிறப்புக்களில் ஒன்று. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்தக் கோவிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.

தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.

விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர். சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். புதுவையை ஆட்சி செய்த பரங்கியர்கள் காலத்தில் மணற்குள விநாயகர் விக்ரகம் பலமுறை கடலில் போடப்பட்டதாகவும், பின்னர் ஒவ்வொரு முறையும் அந்தத் திருவுருவம் பழைய இடத்திலேயே இருந்ததாகவும், மக்கள் இன்று வரை கூறிவரும் செவிவழிச் செய்தியாகும்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகடவுளுக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் பலன்கள் என்ன? எந்தெந்த அபிஷேகங்கள், எப்போது செய்யலாம்?
Next Article கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!. பக்தி பரவசத்தில் கிராம மக்கள்!
Editor 4 web

Related Posts

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

June 19, 2026

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

Trending Posts

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – கும்பம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 19, 2026

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.