திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசிக்கத் திட்டமிட்டுள்ள பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன்பதிவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ‘TTD தேவஸ்தானம்’ மொபைல் செயலி மூலமாகத் தங்களுக்குக் கிடைக்கும் தேதிகளைச் சரிபார்த்து, விரைவாகத் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி தரிசன டிக்கெட்டுகளுக்கு எப்போதும் பக்தர்கள் மத்தியில் அசுர வேகத்தில் டிமாண்ட் இருக்கும் என்பதால், டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தளம் மற்றும் செயலியை மட்டுமே பயன்படுத்துமாறும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

