Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
திருவிழா

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Karur Murugan Temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆடி மாத வளர்பிறை செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி செவ்வாயை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்திற்குப் பிறகு மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த சிறப்பு வழிபாட்டில் புகழூர், நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், புன்னம் சத்திரம் அருகே உள்ள பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட நொய்யல் சுற்றுவட்டார முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

AadiTuesday Karur MuruganTemple Special Aadi Tuesday Prayers Draw Devotees to Murugan Temples in Noyyal Region spirituality
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி
Next Article ராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை பெருவிழா..! திருப்புகழ் இசை வழிபாடு நடத்திய சௌராஷ்ட்ரா மக்கள்..!
Editor web2
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

முசிறி மகாமாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை!. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கூட்டுப் பிரார்த்தனை!

August 1, 2026

இன்றைய (20.06.2026) ராசி பலன் – மேஷம்

June 20, 2026

2026 ஆனி மாத பலன்கள்: கன்னி

June 14, 2026

பெர்லினில் கோலாகலமாக நடந்த ஸ்ரீ கணேசர் கோயில் கும்பாபிஷேகம்!

June 8, 2026

திருப்பதி : ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்..! 18 மணி நேரம் காத்திருப்பு.!

May 18, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.