Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

3-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன வழக்கு
ராசிபலன்

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன வழக்கு

Editor TN TalksBy Editor TN TalksJuly 31, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
b2ca1510 a950 11ee 9f06 0932d79521b8.jpg
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த மார்ச் முதல் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தீட்சிதர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய முடியாது என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து திரும்ப மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்க, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த குழுவினர், வார நாள், வார விடுமுறை நாள், விழா நாள் என மூன்று நாட்கள் நேரில் ஆய்வு செய்து, தீட்சிதர்களின் தற்போதைய திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா? அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அல்லது பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கிறார்களா ? என புகைப்பட ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு..
Next Article குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம்
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

3-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

Trending Posts

3-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 4, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.