பொன்விளைந்த களத்தூர் ஶ்ரீ கோதண்ட ராமர் ஸ்வாமி கோயிலில் பிரபாவ வருட பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மூலவரான ஸ்ரீ கோதண்டராமர் நான்கு கைகளுடன்  ஸ்ரீ கோதண்ட ராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணருடன் பட்டாபிஷேக கோலத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார்.

பிரசித்திபெற்ற இக்கோயிலில் பிரபாவ வருட பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலய குருக்கள், அங்குள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியினை ஏற்றி வைத்தார்.

பக்தர்கள் ஆலயத்துக்கு சென்று ஸ்ரீ கோதண்டராமரை மனமுருக வழிபாடு செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version